பொள்ளாச்சி அருகே மின்சாரம் தாக்கி இரண்டு பெண் காட்டு யானைகள் பலி

பொள்ளாச்சி அருகே பருத்தியூர் பகுதியில் தனியார் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி இரண்டு பெண் காட்டு யானைகள் உயிரிழந்தன. வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள பருத்தியூர் பகுதியில் தனியார் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி இரண்டு பெண் காட்டு யானைகள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரகம், கோட்டூர் பிரிவு பருத்தியூர் உமாண்டி மலை சராகப் பகுதியில் களப்பணியாளர்கள் அன்றாட ரோந்து பணி மேற்கொண்டிருந்தனர். அப்போது, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் இரண்டு பெண் காட்டு யானைகள் உயிரிழந்த நிலையில் காணப்பட்டன.



விசாரணையில், காட்டு யானைகள் மேட்டுப்பகுதியில் இருந்த தாழ்வான நிலத்தடி பகுதியை கடந்து வரும் வழியில் மின்சார கம்பி தாக்கி இறந்திருப்பது கண்டறியப்பட்டது.



இச்சம்பவம் குறித்து வனச்சரக அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் பார்க்கவே தேஜா மற்றும் பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் ஞானபாலமுருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.



யானைகளுக்கு உடற்கூறாய்வு மேற்கொள்ள டாக்டர் விஜயராகவன் தலைமையிலான மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். எனினும், இரவு நேரமாகிவிட்டதால், மறுநாள் காலை மருத்துவர்கள் குழுவினர் யானைகளுக்கு உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. வனத்துறையினர் மேலும் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...