கோவை மாநகராட்சி ஆணையர் கிழக்கு மண்டலத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் மா. சிவகுரு பிரபாகரன் கிழக்கு மண்டலத்தில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை 09.09.2024 அன்று நேரில் ஆய்வு செய்தார். நகர்ப்புற சுகாதார நிலையம், பொது கழிவறை, தங்கும் விடுதி உள்ளிட்ட பல திட்டங்களை பார்வையிட்டார்.


கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல பகுதிகளில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா. சிவகுரு பிரபாகரன் IAS அவர்கள், 09.09.2024 அன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வின்போது, கிழக்கு மண்டலம் வார்டு எண் 54க்குட்பட்ட நீலிக்கோணாம்பாளையம் பகுதியில் 15வது மத்திய குழு மானிய திட்டத்தின்கீழ் ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் நகர்ப்புற சுகாதார நிலையத்தையும்,



வார்டு எண் 24க்குட்பட்ட கெகசியா பகுதியில் தூய்மை இந்தியா (2.0) திட்டத்தின்கீழ் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுவரும் பொது கழிவறையையும் பார்வையிட்டார்.



வார்டு எண் 57க்குட்பட்ட பட்டனம் சாலை, காமராஜர் நகரில் ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் நகர்ப்புற வீடற்றோருக்கான தங்கும் விடுதி கட்டப்பட்டு வருவதையும் ஆணையர் ஆய்வு செய்தார்.



பணிகளை விரைவாகவும் தரமாகவும் செய்து முடிக்க சம்பந்தப்பட்ட பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.





அதனைத் தொடர்ந்து, வார்டு எண் 57க்குட்பட்ட ஓண்டிப்புதூர், சிந்து நகரில் செயல்பட்டுவரும் திடக்கழிவு மேலாண்மை மையத்தை ஆய்வு செய்த ஆணையர், மக்காத குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டார். அதே வளாகத்தில் செயல்படும் வீடில்லா நாய்களின் கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தையும் பார்வையிட்டார்.



வார்டு எண் 8க்குட்பட்ட காளப்பட்டி, சரவணம்பட்டி சாலை முதல் என்.ஜி.பி. கல்லூரி வரை 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தின்கீழ் புதிய இணைப்புச் சாலை அமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்க உத்தரவிட்டார்.





வார்டு எண் 61க்குட்பட்ட சிங்காநல்லூர், ஆணையங்காடு சாலை பகுதியில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் நகர்ப்புற நல வாழ்வு மையம், அங்கன்வாடி மையம், மற்றும் திருச்சி சாலை, சிங்காநல்லூர் குளத்தின் வளாகத்தில் 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றையும் ஆணையர் ஆய்வு செய்தார்.





இந்த ஆய்வுகளின்போது, உதவி ஆணையர் முத்துச்சாமி, செயற்பொறியாளர் கருப்பசாமி, மாமன்ற உறுப்பினர்கள் பாக்கியம், விஜயகுமார், சாந்தாமணி, உதவி செயற்பொறியாளர் ராஜேஷ்கண்ணா, மண்டல சுகாதார அலுவலர் விஜயகுமார், உதவி பொறியாளர்கள் கணேசன், குமார், முத்துக்குமார், ஜெகதீஸ்வரி, சுகாதார ஆய்வாளர்கள் ஜீவமுருகராஜ், முருகேசன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...