கோவை மாவட்டத்தில் நெரிசல் மிகுந்த சாலைகளை விரிவாக்கம் செய்ய வேண்டும் - ஆட்சியரிடம் எம்.பி., பி.ஆர்‌.நடராஜன் கோரிக்கை

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு நீதிமன்ற தீர்ப்பு வழிகாட்டி உள்ளபடி இழப்பீடு விரைவாக வழங்கிட உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கேட்டுக் கொண்டார்.


கோவை: கோவை மாவட்ட மக்களின் பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு வருவதற்கும், மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கவும் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் செவ்வாயன்று கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்தார்.



கோவை பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு நீதிமன்ற தீர்ப்பு வழிகாட்டி உள்ளபடி இழப்பீடு விரைவாக வழங்கிட உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள S வளைவு பகுதியில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்திட ரவுண்டானா அமைத்திட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், தண்ணீர் பந்தல் பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணியை விரைவுபடுத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.



மதுக்கரை மரப்பாலம் பகுதியில் தரைப்பாலம் விரிவுபடுத்துவது குறித்தும், சாய்பாபா காலனி பகுதியில் அமைய உள்ள மேம்பாலம் குறித்தும், மாவட்ட ஆட்சியருடன் நாடாளுமன்ற உறுப்பினர் விவாதித்தார். சமீபத்தில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், சட்டமன்ற உறுப்பினர்களுடன் சாய்பாபா காலனி மேம்பாலம் அமைய உள்ள பகுதியை நேரடியாக ஆய்வு செய்து இருந்தார்.



அது குறித்தும், அப்பகுதியில் எதிர்காலத்தில் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் விதத்தில் மேம்பாலம் அமைய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். சந்திப்பின் போது மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் யு.கே.சிவஞானம், கே.எஸ்.கனகராஜ், 24வது வார்டு மாமன்ற உறுப்பினர் பூபதி, மாவட்ட குழு உறுப்பினர் ஜாகீர், பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் அளித்த விவசாயிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் ரோட்டராக்ட் கிளப் ஆஃப் கோவை நைட்ஸ் சார்பில் ARENA ஸ்போர்ட்ஸ் மீட்

கோவை வெங்கிட்டாபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கமல்நாதன் நினைவு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தேசிய விளையாட்டு தினத்தை மு...

கோவை வார்டுகள் 12, 13-ல் வளர்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.12 மற்றும் 13க்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் தொட...

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...