திருப்பூரில் 4வது குடிநீர் திட்ட சோதனை ஓட்டம் - தண்ணீரை மலர் தூவி வரவேற்ற மேயர்!

திருப்பூர் மாநகரின் குடிநீர் பிரச்சனை தீர்க்கும் வகையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து நான்காவது குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சோதனை ஓட்டத்தின் போது திருப்பூருக்கு கொண்டு வரப்பட்ட தண்ணீரை மேயர் தினேஷ்குமார் மற்றும் எம்.எல்.ஏ செல்வராஜ் ஆகியோர் மலர் தூவி வரவேற்றனர்.


திருப்பூர்: மேட்டுப்பாளையத்தில் இருந்து 4வது குடிநீர் திட்டத்தின் சோதனை ஓட்டத்தின் போது திருப்பூருக்கு வந்த தண்ணீரை மேயர் மற்றும் எம்எல்ஏக்கள் மலர் தூவி வரவேற்றனர்.

திருப்பூர் மாநகரின் தண்ணீர் பிரச்சனையை தீர்க்கக் கூடிய வகையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து நான்காவது குடிநீர் திட்டம் கொண்டு வரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் சோதனை ஓட்டம் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

இந்த நிலையில் திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதிக்கு சோதனை ஓட்டமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து நான்காவது குடிநீர் திட்ட குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. இது வெற்றிகரமாக திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமலை நகர் மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு கொண்டு வரப்பட்டது.



இதனை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் ஆகியோர் மலர் தூவி வரவேற்றனர். திட்டம் முழுமை அடையும் பட்சத்தில் திருப்பூர் மாநகர மக்களுக்கு 4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் மிகவும் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...