'பள்ளி மாணவர்களின் மனதை அமைதி படுத்த யோகா வகுப்பு கொண்டு வர ஆலோசித்து வருகிறோம்', அமைச்சர் செங்கோட்டையன்

ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து பிரதமர்  நரேந்திர மோடியுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசி வருவதாக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து டெல்லியில் பிரதமர்  நரேந்திர மோடியுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசி வருவதாகவும், அவர் வந்த பின்னரே இது குறித்து பேச முடியும் எனவும் தெரிவித்தார். மேலும் நீட் தேர்விற்கு விலக்களிப்பது தொடர்பாக சட்டம் இயற்றி குடியரசு தலைவர் ஓப்புதலுக்காக அனுப்பியிருப்பதாகவும் குடியரசு தலைவர் ஓப்புதல் கிடைக்கும்' என நம்புவதாகவும் கூறினார்.

'தங்களுக்கு சட்டமன்றத்தில் பெரும்பான்மை இருக்கின்றது எனவும் சட்டமன்றத்தில் பலத்துடன் இருப்பதாகவும் குறிப்பிட்டார். ஆசிரியர் தகுதி தேர்விற்கு கட் ஆப் மதிப்பெண் வைத்திருப்பது பாதிப்பு என்ற கருத்து குறித்து பரீசிலனை செய்யப்படும் என கூறிய அமைச்சர்,
பள்ளி மாணவர்களின் மனதை அமைதி படுத்த யோகா வகுப்பு கொண்டு வர ஆலோசித்து வருவதாகவும் முதல்வரின் அனுமதி பெற்று அதனை செயல்படுத்துவோம் எனவும் தெரிவித்தார்.

இதேபோல் கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் பணியானது தற்போது நிறுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்த அவர், பிரதமரிடம் இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசி வருகின்றார் எனவும் சுட்டிக்காட்டினார்.இரட்டை இலை சின்னம் தங்களிடம் இருக்கிறது எனவும் அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா படத்தை வைக்க கூடாது என கூற ஸ்டாலின் உள்ளிட்ட யாருக்கும் உரிமையில்லை எனவும் கூறியதுடன் ஜெயலலிதாவால்தான் இந்த ஆட்சி நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது எனவும் நீதிமன்ற உத்திரவுப்படி சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி நடைபெற்று வருவதாகவும் விளக்கமளித்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...