கோவை அருகே ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள் பறிமுதல் - சட்டவிரோத கும்பல் கைது!

கோவை காரமடை அருகே பழைய கட்டிடங்களை தகர்ப்பதற்கு வைத்திருந்த 622 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 350 எலக்ட்ரிக் டெட்டனேட்டர்களை பறிமுதல் செய்து, திருச்சூரை சேர்ந்த தினேஷ், திருவாரூரை சேர்ந்த செந்தில்குமார், காரமடையை சேர்ந்த சுரேஷ்குமார் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் காரமடை அருகே ஆய்வாளர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் தலைமை காவலர் சிவப்பிரகாஷ் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கண்ணார்பாளையம் பிரிவு சுடுகாடு அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் இரண்டு இருசக்கர வாகனங்களில் சிலர் நின்றுகொண்டிருந்தனர்.



அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் திருச்சூரை சேர்ந்த தினேஷ்(வயது23), ஆனந்த் (வயது25), காரமடையை சேர்ந்த சுரேஷ்குமார் (வயது41) மற்றும் திருவாரூரைச் சேர்ந்த செந்தில்குமார் (வயது43) என்பது தெரியவந்தது.



அவர்கள் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்து பார்த்தபோது, அதில், 26 கட்டுகளில் 650 எலக்ட்ரிக் டெட்டனேட்டர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட இந்த வெடிகளை வைத்திருந்த அந்த நபர்களிடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

அப்போது, சுரேஷ்குமார் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் பழைய கட்டிடங்களை தகர்த்துக் கொடுக்கும் தொழில் செய்கின்ற, காரமடையை சேர்ந்த ரங்கராஜ் என்பவரிடம் வேலை செய்து வருவது தெரியவந்தது.

இந்த நிலையில், ரங்கராஜ் பழைய கட்டிடங்களை தகர்ப்பதற்கு வெடிபொருளை எவ்வித உரிமையுமின்றி, சட்ட விரோதமாக பயன்படுத்தி வருவது போலீசாரின் விசாரணையில் வெளிவந்தது. அவ்வாறு பயன்படுத்தப்படும் எலக்ட்ரிக் டெட்டனேட்டரில் சிலவற்றை அதிக விலைக்கு சட்டத்துக்கு புறம்பாக கேரளாவிற்கு விற்று லாபம் சம்பாதித்திருக்கின்றனர்.

அதனடிப்படையில், காவல்துறையினர் ரங்கராஜ் என்பவரை கைது செய்து, அவரை விசாரித்திருக்கின்றனர்.

அப்போது அவரது வேலை நடந்துவரும் மற்றொரு இடத்திலிருந்து எவ்வித உரிமம் இல்லாமல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 622 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 350 எலக்ட்ரிக் டெட்டனேட்டர் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

வெடிபொருட்களை ரங்கராஜ் என்பவர் சிறுமுகை சேர்ந்த பெருமாள், அன்னூரை சேர்ந்த கோபால் மற்றும் காரமடையை சேர்ந்த சந்திரசேகரன் ஆகியோரிடமிருந்து வாங்கியிருப்பதும் உறுதியானது.

இதையடுத்து போலீசார் நடத்திய தொடர் விசாரணையின் அடிப்படையில், இதில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டனர். தகவல் அறிந்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கைதானவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் 1244 எலக்ட்ரிக் டெட்டனேட்டர்கள் மற்றும் 622 ஜெலட்டின் குச்சிகளையும் பார்வையிட்டதோடு, இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டு துரித நடவவடிக்கை எடுத்த காவல்துறையினரையும் பாராட்டினார்.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...