'பொருளாதாரத்தில் பலமாக இல்லாவிடில் கலாச்சாரம், ஆன்மீகத்தை பாதுகாக்க முடியாது..!' - கோவை ஈஷா நிறுவனர் சத்குரு பேச்சு

பொருளாதாரத்தில்‌ பலமாக இல்லாவிட்டால்‌ நம்‌ நாட்டில்‌ இருக்கும்‌ கலாச்சாரம்‌, ஆன்மீகம்‌ என எதையும்‌ நம்மால்‌ பாதுகாக்க முடியாது என்று குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் ஈஷா நிறுவனர் சத்குரு பேச்சு.


கோவை: கோவை ஈஷா மையத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் சத்குரு தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.



கோவை ஈஷா மையத்தில் 74வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.



இதில் சத்குரு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது,



தேசத்தில்‌ வாழும்‌ நாம்‌ ஜாதி, மதம்‌, மொழி, இனம்‌, உணவுப் பழக்கம்‌, கலாச்சாரம்‌ எனப் பல விதங்களில்‌ வேறுபட்டு உள்ளோம்‌. நம்மிடம்‌ எவ்வளவு வேறுபாடுகள்‌ இருந்தாலும்‌ நாம்‌ அனைவரும்‌ பல நூறு ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வருகிறோம்‌.

சுதந்திரத்திற்கு முன்பு நம்‌ தேசத்தை 600-க்கும்‌ மேற்பட்ட குறு நில அரசர்கள்‌ ஆட்சி செய்து வந்தனர்‌. இருப்பினும்‌, வெளியிலிருந்து வந்தவர்கள்‌ அனைவரும்‌ நம்மை இந்துஸ்தான்‌ அல்லது பாரதம்‌ என்று ஒற்றை பெயர்‌ வைத்தே அழைத்தனர்‌.

நம்மிடம்‌ இருக்கும்‌ இந்த பன்மைத்துவத்தையும்‌, வேறுபாடுகளையும்‌ பயன்படுத்தி நமக்குள்‌ பிரிவினையை உருவாக்கும்‌ செயல்கள்‌ கடந்த 600 முதல்‌ 700 ஆண்டுகளில்‌ மிகவும்‌ தீவிரமாக நடந்துள்ளன. நம்‌ தேசத்தின்‌ மீது படையெடுத்தவர்களும்‌, ஆக்கிரமித்தவர்களும்‌ இதைப் பல வழிகளில்‌ மிகவும்‌ திட்டமிட்டுச் செய்துள்ளனர்‌.



குறிப்பாக, நம்‌ தேசத்தின்‌ பொருளாதார முதுகெலும்பைத் தகர்ப்பதற்கும்‌ அவர்கள்‌ செயல்‌ செய்துள்ளார்கள்‌. 300 ஆண்டுகளுக்கு முன்பு வரை உலகளவில்‌ பொருளாதாரத்தில்‌ வளமான தேசமாக நம்‌ பாரத தேசம்‌ இருந்தது. அந்த நிலையை மீண்டும்‌ அடையும்‌ முயற்சியில்‌ நாம்‌ தற்போது உள்ளோம்‌.

பொருளாதார பலம்‌ இல்லாமல்‌ கலாச்சாரம்‌, ஆன்மீக விழுமியங்கள்‌ என நாட்டில்‌ உள்ள எதையும்‌ நம்மால்‌ பாதுகாக்க முடியாது. மேலும்‌, நம்மிடம்‌ இருக்கும்‌ பல விதமான வேறுபாடுகளைக் கடந்து எது நம்மை ஒற்றுமையாக வைத்துள்ளது என்பதை நீங்கள்‌ கண்டறிந்து அதை மேலும்‌ பலப்படுத்த வேண்டும்,‌ என்றார்.

Newsletter

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...