காமாலை வந்த கண்களுக்கு எல்லாமே மஞ்சளாகத் தான் தெரியும்..! - ஜெயக்குமாருக்கு மக்கள் நீதிமய்யம் பதிலடி

திமுகவின் பி டீம் மக்கள் நீதி மய்யம் என்றும், பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது என்று விமர்சனம் செய்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு, காமாலை வந்த கண்களுக்கு எல்லாமே மஞ்சளாகத் தான் தெரியும் என்று மநீம மாநிலச் செயலாளர் சு.ஆ.பொன்னுசாமி பதில்.


கோவை: திமுகவின் பி டீம் மக்கள் நீதி மய்யம் என்றும், பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது என்று விமர்சனம் செய்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு, மக்கள் நீதி மய்யம் பதிலடி கொடுத்துள்ளது.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் மதவாத சக்திகள் வெற்றி பெற்று விடக்கூடாது என்பதால் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரிக்கும் முடிவை எடுத்துள்ள மக்கள் நீதி மய்யத்தையும், தலைவர் கமல்ஹாசனையும் திமுகவின் பி-டீம் எனவும், பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது என விமர்சனம் செய்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பது காமாலை வந்த கண்களுக்கு எல்லாமே மஞ்சளாகத் தான் தெரியும் என்பதைப் போல இருக்கிறது.

மத்தியில் ஆளுகின்ற, பிரித்தாளும் சூழ்ச்சி, வெறுப்பு அரசியலுக்குச் சூத்திரதாரியாக இருந்து வரும் பாஜகவின் பி-டீமாக அதிமுக இருப்பதாலேயே அக்கட்சியில் அங்கம் வகிக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் கண்களுக்கு நேர்மையின் கொம்பன் கமல்ஹாசனும், மக்கள் நீதி மய்யமும் திமுகவின் பி-டீமாக தெரிந்திருக்கிறது.

ஏற்கனவே அதிமுக மூன்று, நான்கு அணிகளாகப் பிளவுபட்டு, அழிவின் விளிம்பில் இருக்கும் சூழலில், உட்கட்சி விவகாரத்தில் "எதைத் தின்றால் பித்தம் தெளியுமோ..?" என்கிற ரீதியில் "இஞ்சி தின்ற மங்கி போல" விரக்தியின் உச்சத்தில் இருக்கும் ஜெயக்குமார், மக்கள் நீதி மய்யம் குறித்தோ,கமல்ஹாசன் குறித்தோ விமர்சனம் செய்யத் தகுதியற்றவராவார்.

மேலும் தற்போது தமிழ்நாட்டில் உள்ள அரசியல் சூழ்நிலையையும், பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சியினால் ஏற்பட்டுள்ள அவசரநிலையையும் கருத்தில் கொண்டு மக்கள் நீதி மய்யம் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழுவும், தலைவர் கமல்ஹாசனும் சேர்ந்து எடுத்துள்ள இந்த முடிவு மதவாத சக்திகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதின் வெளிப்பாடாகத் தான் ஜெயக்குமாரின் உளறல் பேச்சு அமைந்துள்ளது.

அதே சமயம் தமிழ்நாட்டில் மதவாத சக்திகளோடு கரம் கோர்த்துள்ள அதிமுகவின் தோல்வி ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் 100% உறுதியான விரக்தியில் ஏற்பட்டுள்ள அச்ச உணர்வின் காரணமாகவும், ஆற்றாமையின் வெளிப்பாடாகவும், தனது வயிற்றெரிச்சலை அடக்க முடியாமல் ஜெயக்குமார் வார்த்தைகளைக் கொட்டியிருக்கிறார் என்பது இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது.

தங்களை அமைச்சர்களாக்கி அழகு பார்த்த அந்த அம்மையார் ஜெயலலிதாவைக் காப்பாற்றத் திராணியற்ற ஜெயக்குமார், ஈபிஎஸ், ஓபிஎஸ் வகையறாக்களைக் கொண்ட அதிமுகவினை ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் படுதோல்வி அடையச் செய்து தமிழ்நாடு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என்று தான் அம்மையார் ஜெயலலிதாவின் ஆத்மா விரும்பும் என்பது மறுக்க முடியாத உண்மை எனக் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...