குப்பையில்லா நகரமாக கோவையை மாற்றுவோம்..! - களத்தில் இறங்கிய என்சிசி மாணவர்கள்

கோவை சுங்கம் குளக்கரையில் உள்ள குப்பைகளை, 200க்கும் மேற்பட்ட என்சிசி மாணவர்கள் இணைந்து சுத்தம் செய்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.



கோவை: கோவை மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பள்ளி கல்லூரி என்சிசி மாணவர்கள், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.



அதன் தொடர்ச்சியாக இன்று சுங்கம் பகுதியில் உள்ள குளக்கரையில் இருந்த குப்பைகளை தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தேசிய மாணவர் படை மாணவ மாணவியர் அகற்றினர்.



இதில் ஸ்ரீ கோபால் நாயுடு உயர்நிலைப்பள்ளி, சிஎம்எஸ் மெட்ரிக் பள்ளி, சர்வஜனா மேல்நிலை பள்ளி, நேஷனல் மாடல் மெட்ரிக் பள்ளிகளைச் சேர்ந்த என்சிசி மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று குப்பைகளை அகற்றினர்.

மேலும் பிளாஸ்டிக் குப்பைகளை பயன்படுத்த வேண்டாம், குப்பைகளை குப்பை தொட்டில் போட வேண்டும், சுற்றுசூழலை பேணி காக்க வேண்டும் போன்ற விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனை தேசிய மாணவர் படை கோவை மாவட்ட அதிகாரி குமரன் ஒருங்கிணைத்தார்.

ஆறாவது தமிழ்நாடு மெடிக்கல் கம்பெனி சார்பில் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...