திருப்பூரில் மனித சங்கிலி மூலமாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்

திருப்பூரில் முக்கிய நான்கு பகுதிகளில் சாலை பாதுகாப்பின் அவசியத்தை கொண்டு செல்லும் விதமாக மனித சங்கிலி மூலம் பள்ளி மாணவர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இந்நிகழ்வை போலீஸ் உதவி கமிஷனர் அனில்குமார் தொடங்கி வைத்தார்.



திருப்பூர்: திருப்பூரில் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வை போலீஸ் உதவி கமிஷனர் அனில்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.



இந்நிகழ்ச்சியை மாணவ-மாணவிகள் திருப்பூர் புஷ்பா சந்திப்பில் அவினாசி ரோடு, பி.என்.ரோடு, காலேஜ் ரோடு, ரெயில்வே மேம்பாலம் உள்ளிட்ட 4 இடங்களில் கட்டாயம் தலைக்கவசம் அணிவது, மது குடித்துவிட்டு, செல்போன் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது, அதிவேகமாகவும், ஒருவழிப் பாதையிலும் செல்லக்கூடாது, சாலை விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி மனித சங்கிலியாக நின்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.



இதற்கு முன்னதாக சாலை விதிமுறைகளை மீறுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவிகள் தத்ரூபமாக நடித்துக் காட்டினார்கள். இதில் ரோட்டரி சங்க நிர்வாகிகள், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

Newsletter

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...