கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி முடித்த 1434 மாணவர்களுக்கு பட்டங்களும், 14 தங்கப் பதக்கங்களும் வழங்கப்பட்டன. பெங்களூரு பல்கலைக்கழக இணை துணை வேந்தர் நாகார்ஜுனா சதினேனி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


Coimbatore: கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று சிறப்பாக நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி முடித்த மாணவர்களுக்கான இந்த விழாவில் 1434 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.




கற்பகம் கல்வி நிறுவனங்களின் தலைவர் Dr. R. வசந்தகுமார் விழாவிற்கு தலைமை தாங்கினார். Dr. நாகார்ஜுனா சதினேனி, இணை துணை வேந்தர் (Pro Vice Chancellor), PES பல்கலைக்கழகம், பெங்களூரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். Dr. தனசேகரன் ராதாகிருஷ்ணன், Global Senior Vice President, Product Engineering CU–ERS, HCLTech, பெங்களூரு கௌரவ விருந்தினராக விழாவில் பங்கேற்றார்.




தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. கல்லூரி முதல்வர் Dr. P. கார்த்திகைக்குமார் வரவேற்புரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து Dr. நாகார்ஜுனா சதினேனி தலைமையுரை வழங்கினார். பின்னர் Dr. தனசேகரன் ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.




தனது சிறப்புரையில், பட்டம் பெற்ற மாணவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், கல்வியின் ஆற்றல் இளைஞர்களை வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொள்பவர்களாக மாற்றுகிறது என்று கூறினார். AI தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தையும், இயற்கை தொழில்நுட்பத்தின் அவசியத்தையும் எடுத்துரைத்தார். வாழ்வில் உழைப்பு மற்றும் நேர்மை மிக முக்கியமானது என்றும் வலியுறுத்தினார்.




விழாவில் 1434 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. தேர்வில் முதன்மை மதிப்பெண் பெற்ற 14 மாணவர்களுக்கு தங்க பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. கற்பகம் கல்வி நிறுவனங்களின் தலைவர் R. வசந்தகுமார், முதன்மை நிர்வாக அதிகாரி K. முருகையா, கல்லூரி முதல்வர் Dr. P. கார்த்திகைக்குமார், திருமதி. சோபியா Dean உள்ளிட்டோர் பங்கேற்றனர்.




கல்லூரியின் முதன்மையர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். மாணவர்களின் எதிர்காலத்திற்கு வழிகாட்டும் வகையில் பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.


Newsletter

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...