கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் குனியமுத்தூர் காவல்நிலையம் அருகே பிடிக்கப்பட்டன. பன்றி வளர்ப்பவர்களுக்கு சுகாதார சட்டத்தின் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டது. மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு தெருவோர பன்றிகளை பிடிக்கும் பணியை 06.08.2026 அன்று தீவிரமாக மேற்கொண்டது. மாநகராட்சியின் 5 மண்டலங்களுக்கு உட்பட்ட 100 வார்டு பகுதிகளில் பொதுமக்களுக்கு தொல்லை அளித்து வந்த தெருவோர பன்றிகளை பிடிக்கும் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நடவடிக்கையின் போது, தெற்கு மண்டலம் வார்டு எண் 91க்கு உட்பட்ட நேதாஜிபுரம் மற்றும் குனியமுத்தூர் காவல்நிலையம் பின்புறம் உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு பன்றி பிடிப்பு குழுவினர் நடவடிக்கை மேற்கொண்டனர். இதில் மொத்தம் 13 பன்றிகள் வெற்றிகரமாக பிடிக்கப்பட்டன. பிடிக்கப்பட்ட இந்த பன்றிகள் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் மாநகராட்சி எல்லைக்கு வெளியே பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தப்பட்டன.
மேலும், இந்த பகுதிகளில் பன்றிகளை வளர்த்து வந்த உரிமையாளர்களுக்கு தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939-ன் படி கண்டிப்பான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு விளக்கம் கேட்டு சட்டப்பூர்வ நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், "மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பன்றி வளர்ப்பவர்கள் பொதுமக்களுக்கு இடையூறாகவும், சுகாதார கேடு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டால், தமிழ்நாடு பொதுசுகாதார சட்டம் 1939-ன் படி கடுமையான சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.