கரூர் மாவட்டத்தை சேர்ந்த குமார் என்பவர் கோவைக்கு பேருந்தில் பயணித்த போது, நடத்துனரிடம் ஏற்பட்ட வாக்குவாதத்தில் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற போது, அவரது பையில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 80 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கோவை: கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த குமார் இவர் பேருந்தில் வந்த போது, உடன் வைத்திருந்த கை பைக்கு டிக்கெட் எடுக்காமல் இருந்துள்ளார். அப்போது நடத்துநர் குமாரை பைக்கான டிக்கெட் எடுக்க வலியுறுத்தியுள்ளார்.ஆனால் குமார் டிக்கெட் எடுக்க மறுத்துள்ளார். இதனால் நடத்துனருக்கும் குமாருக்கு வாக்குவாதம் எழுந்துள்ளது.
இதையடுத்து, நடத்துநர் பேருந்தை நேராக காட்டூர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து புகார் அளித்தார். இதையடுத்து, காட்டூர் போலீசார் குமாரிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், சந்தேகத்திற்கிடமாக இருந்த அந்த பையை சோதனை செய்தனர்.
அப்போது அந்த பையில் கட்டு கட்டாக பணம் இருந்துள்ளது. போலீசார் பணத்தை எண்ணி பார்த்த போது அதில் ரூ.80 லட்சம் பணம் இருந்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், பைனான்ஸ் வழங்குவதற்காக பணம் வைத்திருந்ததாக குமார் தெரிவித்துள்ளார்.
அதே நேரம், அவரிடம் அந்த பணத்திற்கான முறையான ஆவணங்கள் ஏதும் இல்லாததால், இது ஹவாலா பணமா..? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்ட போலீசார், வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தனர்.
இதையடுத்து காவல்நிலையத்திற்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ரூ.80 லட்சம் பணத்திற்கான உரிய ஆவணங்களை அளிக்கவில்லை என்றால் பணம் பறிமுதல் செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.80 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.