கோவை சிறுவாணி சாலை அருகே தரைப்பாலத்திற்கு தோண்டிய குழியில் லாரி சிக்கியதால் 2 மணி நேர போக்குவரத்து பாதிப்பு

தெலுங்குபாளையம் அருகே உள்ள வாய்க்கால் சோதனைச்சாவடி அருகே சாலையின் குறுக்கே தரைப்பாலப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை அவ்வழியாக கோழித்தீவன லோடுடன் வந்த ஈச்சர் லாரியின் சக்கரம் சாலை அருகே தோண்டப்பட்ட குழியில் சிக்கியது.



கோவை: கோவை சிறுவாணி சாலை தெலுங்குபாளையம் அருகே உள்ள வாய்க்கால் சோதனைச் சாவடி அருகே சாலையின் குறுக்கே தரைப்பாலப் பணிகள் மற்றும் சாலை சீரமைப்பு பணிகள் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வருகிறது.



இந்த நிலையில், இன்று காலை வழக்கம் போல் அந்த சாலையில் ஓரத்தில் வாகனங்கள் இயக்கப்பட்ட நிலையில், அவ்வழியாக கோழித்தீவன லோடுடன் வந்த ஈச்சர் லாரியின் சக்கரம்சாலை அருகே தோண்டப்பட்ட குழியில் சிக்கியது. இதனால், அந்த சாலையில் எந்த வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையில் நிற்கக்கூடிய காட்சிகளை பார்க்க முடிந்தது. எனவே, அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.



இதையடுத்து பொக்லைன் வாகனம் வரவழைக்கப்பட்டு, குழியில் சிக்கிய ஈச்சர் லாரி மீட்கும் முயற்சியில் போக்குவரத்து காவலர்கள் மற்றும் அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் ஈடுபட்டனர். ஆனால் லாரியை வெளியே எடுக்க முடியாததால், கூடுதல் பொக்லைன் வாகனங்கள் வரவழைக்கப்பட்டது.

இந்த சம்பவத்தால்,காலை வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் செல்லக்கூடிய மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.



Newsletter

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...