பெங்களூரில் இருந்து கோவைக்கு கடத்தி வந்த 2 டன் குட்கா சிக்கியது - ஆம்னி பேருந்து உட்பட 8 பேர் கைது

கோவை அவினாசி சாலையில் நடைபெற்ற வாகன சோதனையில் 2 டன் குட்கா மாறும் 20 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு 8 பேர் கைத செய்யப்பட்டனர் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு குவியும் பாராட்டுகள்.


கோவை: கோவை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுக்க மாவட்ட எஸ்.பி.உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவினாசி சாலை நீலாம்பூர் தனியார் நட்சத்திர விடுதி அருகே சூலூர் தனிப்படை போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த ஆம்னி பேருந்தை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அதில் சுமார் 500 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து பேருந்தில் இருந்த செந்திகுமார் (47), மேகபூ பாஷா (30), செந்தில்ராஜா (44), ஜெயபிரகாஷ் (39) ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.



மேலும் ஆம்னி பேருந்து மற்றும் குட்காவை வாங்கிச் செல்ல வந்த கார் மற்றும் ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணை அடிப்படையில் மயிலம்பட்டி கிராமத்திற்கு சென்று சோதனை மேற்கொண்ட போது அங்கு வாடகைக்கு அறை எடுத்து குட்காவை பதுக்கி வைத்திருந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பரத் பட்டேல் (26), அமரராம் (22), கோபால் (22), மைபால் (22) ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர்.



மேலும் அவர்கள் பதுக்கி வைத்திருந்த சுமார் 1.5 டன் குட்கா பொருட்கள் மற்றும் கார், இரு சக்கர வாகனங்கள் மற்றும் ரூ.20 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.



கைது செய்யப்பட்ட 8 பேரையும் தனிப்படை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



முன்னதாக மாவட்ட எஸ்.பி.பத்ரிநாராயணன் நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார்.



மேலும் சிறப்பாக பணியாற்றி 2 டன் குட்கா மற்றும் வாகனங்கள், ரூ.20 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து 8 பேரை கைது செய்த காவலர்களை பாராட்டினார்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...