கோவையில் மதுபோதையில் உருட்டு கட்டையால் தாக்கி தொழிலாளி கொலை - போலீசார் விசாரணை

கோவை சரவணம்பட்டி அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை கட்டையால் அடித்துக் கொலை செய்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.



கோவை: கோவை கணபதி அண்ணா நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ் (53). கூலி தொழிலாளியான இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், குடிபோதைக்கு அடிமையான வெங்கடேஷ் தினமும் வேலை முடிந்து மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவது வழக்கமாக வைத்திருந்துள்ளார். இதேபோல் நேற்றிரவு வேலை முடிந்து அவர் அப்பகுதியில் உள்ள நகர் நல மையம் அருகே சிலருடன் அமர்ந்து மது அருந்தியுள்ளார்.

அப்போது வெங்கட்டேஷுக்கும் மற்றொருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த நபர் கீழே கிடந்த உருட்டு கட்டையால் வெங்கடேஷை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த வெங்கடேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே, பயந்து போன அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக தெரிகிறது. இந்நிலையில், வெங்கடேஷ் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வெங்கடேஷை உருட்டு கட்டையால் தாக்கி கொலை செய்த நபர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...