சிறுபான்மையினரின் வழிபாட்டு உரிமையை பாதுகாக்க வலியுறுத்தி திருப்பூரில் அனைத்து இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள சிறுபான்மையினரின் வழிபாட்டு உரிமையை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பாக இஸ்லாமியர்கள் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் 15.வேலம்பாளையம், அவிநாசி, திருமுருகன்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் இஸ்லாமியர்களின் மத வழிபாட்டு உரிமையை பறிக்கும் வகையில் ஒரு சில அதிகாரிகள் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.



இதனை கண்டித்து, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அனைத்து இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பினரின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், 15 வேலம்பாளையம் மசூதி தொடர்பாக தனி நபர்கள் தொடுத்த வழக்கின் காரணமாக இஸ்லாமியர்களின் தொழுகை உரிமையை மறுக்கும் வகையில் செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டது.



இதன் காரணமாக வழிபாட்டு உரிமையை மறுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள சிறுபான்மையினரின் வழிபாட்டு உரிமையை பாதுகாத்திட வேண்டும் என வலியுறுத்தினர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில், ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருக்கும் வகையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...