கோவை ஈச்சனாரி அருகே டெல்லி இளைஞரை மிரட்டி வழிப்பறி - 3 பேர் கொண்ட மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

ஈச்சனாரி அருகே எலக்ட்ரீசீயனாக பணியாற்றி வரும் பிரேந்திரா சிங் வேலை முடிந்து நடந்து சென்ற போது அவரை வழிமறித்த மர்ம கும்பல், ரூ.6,000 பணம், செல்போன் உள்ளிட்டவற்றை பறித்துச் சென்றுள்ளது.


கோவை: டெல்லியை சேர்ந்தவர் பிரேந்திரா சிங்,இவர் கோவை ஈச்சனாரி பகுதியில் தங்கி எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு வேலையை முடித்துவிட்டு ஈச்சனாரி அருகே உள்ள கல்லூரியின் பின்புற சாலையில் தனது தங்கும் விடுதி நோக்கி நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த மூன்று பேர் கொண்ட மர்ம நபர்கள்அவரை வழிமறித்து மிரட்டியுள்ளனர்.

இதனையடுத்து அவரிடம் இருந்து ரூ.6,000 ரொக்கம், செல்போன், கிரெடிட் கார்டு, டிரைவிங் லைசன்ஸ், ஏடிஎம் கார்டு உள்ளிட்டவற்றை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பிரேந்திரா சிங் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

ஈச்சனாரி அருகே நடைபெற்ற இந்த வழிப்பறி சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...