திருப்பூர் காவலர் குடியிருப்பில் ஆயுதப்படை காவலர் தூக்கிட்டு தற்கொலை‌

திருப்பூர் காவலர் குடியிருப்பை சேர்ந்த ஈஸ்வரன் என்கிற காவலர் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நல்லூர் காவல்துறை வேறு ஏதேனும் காரணம் உண்டா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் ஆயுதப்படை பிரிவில் காவலராக பணிபுரிந்து வந்த தேனி மாவட்டம் சுருளி பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (33) என்பவர் நல்லூரில் உள்ள ஆயுதப்படை பிரிவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

இவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் நல்லூரில் உள்ள காவலர் குடியிருப்பில் குடியிருந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழா பாதுகாப்பு பணிக்கு மதுரை மாவட்டத்திற்கு பாதுகாப்பு பணிக்கு சென்று இன்று தான் வீட்டிற்கு திரும்பி உள்ளார்.

அப்போது கணவன் மனைவி இடையே சண்டை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மனைவி மற்றும் குழந்தை வெளியே இருந்த சமயத்தில் ஈஸ்வரன் வீட்டின் உள்ளே தூக்கிட்டு தற்கொலை‌ செய்து கொண்டார்.

தகவல் அறிந்து விரைந்து சென்ற நல்லூர் போலீசார் ஈஸ்வரன் உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

வீட்டில் மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக காவலர் தூக்கிட்டு தற்கொலை‌ செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...