வால்பாறை நகராட்சியில் நடைபெற்ற நகர மன்ற கூட்டத்தில் தெருவிளக்கு ஒப்பந்தத்தை ரத்து செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 62 எஸ்டேட்டுகளில் தெரு விளக்கு சரியாக எரியாத நிலையில் இன்னும் முறையாக சரி செய்யபடாததால் தெருவிளக்கு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பியதால் தெருவிளக்கு ஒப்பந்தம் ரத்து செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


கோவை: வால்பாறை நகராட்சியில் இன்று நகர மன்ற கூட்டம் நகர மன்ற தலைவர் அழகு சுந்தரம்வள்ளி மற்றும் துணை தலைவர் செந்தில் குமார் தலைமையில் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் நகர மன்ற உறுப்பினர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டம் ஆரம்பித்த நிலையில் நாளை 1.11.2022 ஆம் ஆண்டு உள்ளாட்சி தினம் கொண்டாடும் வகையில் வார்டுகளில் கிராம சபை கூட்டம் நடைபெறுவதாக தெரிவித்தனர்.



அப்போது வால்பாறையில் 21 வார்டுகளில் 62 எஸ்டேட்டுகளில் தெரு விளக்கு சரியாக எரியாத நிலையில் கடந்த மூன்று மாதம் நகர மன்ற கூட்டத்தில் தெருவிளக்கு பிரச்சனை பற்றி வார்டு உறுப்பினர்களும் தெரிவித்தனர்.

எஸ்டேட் பகுதிகளில் தெருவிளக்கு சரிவர எரியாததால் கரடி யானைகள் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. மேலும் இரவு நேரங்களில் கரடி தாக்குதல் அதிகரித்து வருகிறது என்று நகர மன்ற கூட்டத்தில் தெரிவித்தனர்.

மேலும் நகர மன்ற கூட்டத்தில் பலமுறை நகர மன்ற கூட்டத்தில் தெருவிளக்கு ஒப்பந்தத்தை ரத்து செய்ய கூறியும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாதது ஏன் என்று துணை தலைவர் செந்தில் 9 வது வார்டு கவுன்சிலர் மகுடேஸ்வரன் 17 வது வார்டு கவுன்சிலர் மணிகண்டன் 15 வது வார்டு கவுன்சிலர் ரவிச்சந்திரன் கேள்வி எழுப்பினர்.

திமுக ஆட்சியில் கெட்ட பெயர் ஏற்படுத்தாதீர்கள் உடனடியாக தெருவிளக்கு பிரச்சனையே சரி செய்ய வேண்டும் சரி வர பணி செய்யாததால் தெருவிளக்கு ஒப்பந்தத்தை ரத்து செய்து வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கவுன்சிலர்கள் கூச்சலியிட்டனர். பின்பு நகர மன்ற தலைவர் தெரு விளக்கு ஒப்பந்தத்தை ரத்து செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...