கோவை மதுகரையில் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் பரிதாப உயிரிழப்பு

கோவை மதுகரையில் வீடு கட்டும் பணியில் ஈடுபட்ட கட்டிட தொழிலாளி சின்னையன் என்பவர் தவறி விழுந்ததில் படுகாயமடைந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: மதுக்கரை வழுக்கு பாறை பகுதியில் வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அப்பணியில் தர்மபுரி மாவட்டம், கோபி நத்தம் பட்டியைச் சேர்ந்தவர் சின்னையன் (47) என்கிற கட்டிட தொழிலாளியும் பணிபுரிந்து வந்தார். இவர் ரத்தினபுரி எம்ஜிஆர் நகரில் தங்கி இருந்து தினமும் கட்டிட வேலை செய்து வருகிறார் .

இன்று வழக்கம் போல கட்டிட பணியில் இருந்த போது தற்செயலாக திடீரென்று கால் இடறி மாடியில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் அடைந்த சின்னப்பனை சிகிச்சைக்காக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் போகும் வழியிலேயே பரிதாபமாக பலியானார்.

இது குறித்து அவரது மகன் செல்லதுரை மதுக்கரை போலீசில் புகார் செய்தார் இன்ஸ்பெக்டர் வைரம் இவ்வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...