கோத்தகிரி அருகேயுள்ள மிளிதேன் கிராமத்துக்குள் இரவு நேரத்தில் புகுந்த பெரிய கரடியால் பரபரப்பு

கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் கரடிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் வனத்துறையினர் கண்காணித்து, அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


நீலகிரி:கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கரடி, காட்டுயானை, சிறுத்தை, காட்டெருமை, புலி, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

உணவு தேடி வனப்பகுதியைவிட்டு வெளியே வரும் வனவிலங்குகள் மனிதர்களை தாக்குவதும், பயிர்களை சேதப்படுத்துவதும் தொடர்கிறது.

சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் குடியிருப்புகளை ஒட்டி அமைந்து உள்ள தேயிலை தோட்டத்தில் கரடி முகாமிட்டுள்ளன.



அவைகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளிலும் உலா வருகின்றன. மேலும் மனித-வனவிலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகள் நடக்கிறது.

இந்த நிலையில் கோத்தகிரியில் உள்ள மிளிதேன் கிராம பகுதிகளில் மிளிதேன் கிராமத்துக்குள் இரவு நேரத்தில் பெரிய கரடியொன்று புகுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்று குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் கரடிகள் பொதுமக்களை தாக்கும் அபாயம் உள்ளது. இதனால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் பெரும் பீதியடைந்து உள்ளனர்.



இது சார்ந்து பொதுமக்கள் கூறியதாவது:-

குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் கரடிகளின் நடமாட்டதை வனத்துறையினர் கண்காணித்து, அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...