குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கையாக மாநில எல்லையில் சுகாதார ஆய்வாளர்களை பகல், இரவாக பணிக்கு அமர்த்தினாலும் சோதனைச் சாவடிகளில் யாரும் இல்லாததால் வாளையாறு சோதனை சாவடி வெறிச்சோடி காணப்படுகிறது.
கோவை: குரங்கு அம்மை எதிரொலி காரணமாக, கேரளாவில் இருந்து வருவோரை பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை உத்தரவிட்ட நிலையில், அதிகாரிகளின்றி சோதனை சாவடிகள் வெறிச்சோடி காணப்பட்டது.
கொரோனா அலை ஓய்ந்த நிலையில், உலகையே அச்சுறுத்தி வரும் குரங்கு அம்மை பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்டு வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில், இந்தியாவின் முதல் குரங்கு அம்மை பாதிப்பு கேரளாவில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், கேரளாவில் இரண்டு பேருக்கு குரங்கு அம்மை உறுதியானதால், தமிழக எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை உத்தரவிட்டது. இதனால் கோவை - கேரள எல்லையான வாளையாறு உள்ளிட்ட சோதனைச் சாவடிகளில் இரண்டு சுகாதார ஆய்வாளர்கள் கேரளாவில் இருந்து கோவை வரும் பொதுமக்களுக்கு காய்ச்சல் மற்றும் குரங்கு அம்மை அறிகுறி உள்ளதா? என சோதனை செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால், சில நேரத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனையில் போலீஸ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இல்லாததால், பெரும்பாலான வாகனங்கள் சோதனைக்கு நிற்பது இல்லை, மேலும்கேரளாவில் இருந்த வாகனங்கள் சர்வீஸ் சாலைக்கு திருப்பி விடாததால் நெடுஞ்சாலையில் செல்கிறது.
இந்நிலையில், குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கையாக மாநில எல்லையில் சுகாதார ஆய்வாளர்களை பகல், இரவாக பணிக்கு அமர்த்தினாலும் சோதனைச் சாவடிகளில் யாரும் இல்லாததால் வாளையாறு சோதனைச் சாவடி வெறிச்சோடி காணப்படுகிறது.
உடனடியாக சுகாதாரத்துறை உத்தரவை மாவட்ட அதிகாரிகள் பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகிறது.