கோவையில் இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கிணற்றின் சுவரின் மீது மோதி விபத்து – தூக்கி வீசப்பட்டு கிணற்றில் விழுந்த இளம்பெண் உயிரிழப்பு..!

தீயணைப்புத் துறையினர் கிணற்றில் சடலமாக இருந்த இளம் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவையில் இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கிணற்றின் சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானதில், தூக்கி வீசப்பட்டு கிணற்றில் விழுந்த இளம் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை சூலூர் பச்சார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நாச்சிமுத்து, இவரது மனைவி தமிழ்செல்வி, இவர்களுக்கு திருமணம் ஆகி சபிதா (18) என்ற மகளும், சந்தோஷ் (12) என்ற மகனும் உள்ளனர்.

மேலும், நாச்சிமுத்து தேங்காய் லோடு ஏற்றும் வேலை செய்து வருகிறார். தமிழ்செல்வி மற்றும் அவரது மகள் சபிதா இருவரும் சுல்தான் பேட்டையில் உள்ள சுரேஷ் என்பவரது தேங்காய் மண்டியில் தேங்காய் உடைக்கும் வேலை செய்து வந்தனர்.

மேலும் தமிழ்செல்வி, சபிதா இருவரும் வழக்கமாக தங்களது இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து வேலைக்குச் சென்று வந்தனர். இந்நிலையில், இன்று காலை 7-மணியளவில் வழக்கம் போல தமிழ்செல்வியும் மகள் சபிதாவும் இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு சென்றுள்ளனர்.

அப்போது சபிதா வாகனத்தை ஓட்டியுள்ளார். அப்போது பச்சார்பாளையம் – பொள்ளாச்சி, பல்லடம் மெயின் ரோட்டில் வந்துள்ளனர். நல்ல தண்ணீர் தோட்டம் அருகே வந்த போது அங்கிருந்த வளைவில் திரும்பியுள்ளனர். வேகமாக வந்ததால் பின்னால் அமர்ந்திருந்த தமிழ்செல்வி நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் அங்கிருந்த கிணற்றின் சுவர் மீது மோதி சபிதா அங்கிருந்த 80 அடி கிணற்றுக்குள் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து, தமிழ்ச்செல்வி சத்தம் போடவே அங்கிருந்தவர்கள் வந்து பார்த்த போது கிணற்றிற்குள் சபிதா விழுந்தது தெரியவந்தது.



இதையடுத்து சுல்தான் பேட்டை போலீஸ் மற்றும் சூலூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் இறங்கி கிணற்றில் சடலமாக இருந்த சபிதா உடலை மீட்டனர்.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...