கோவை செயல்பட்டு வரும் ராக்ஸ் பள்ளிக்கூடம் (Rak's Pallikkoodam) என்ற பள்ளியில், கடந்த 22ம் தேதி 7 வயது சிறுமி மீது கோல் போஸ்ட் சரிந்து விழுந்ததில், சிறுமிக்கு மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளார். சம்பவம் தொடர்பாக, பள்ளியின் நிர்வாக இயக்குனர் உட்பட 5 பேர் மீது பீளமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கோவை: கோவை பீளமேடு பகுதியில் உள்ள "ரேக்ஸ் பள்ளிக்கூடம்" (RAKS Pallikoodam) என்ற ஐ.சி.எஸ்.சி பள்ளியில் கோல் போஸ்ட் சரிந்து விழுந்ததில் 7 வயது சிறுமி படுகாயம் அடைந்து தனியார்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து தொடர்பாக பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் மீது பீளமேடு காவல் நிலையத்தில் இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை பீளமேடு பகுதியில் ரேக்ஸ் பள்ளிக்கூடம்என்ற ஐ.சி.எஸ்.சி பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளி வளாகத்தில் கடந்த 22ம் தேதி மதியம் சுமார் 1 மணியளவில் 7 வயது சிறுமி குஷிபாக்மர் என்பவர் சக குழந்தைகளோடுவிளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது.
அப்போது மைதானத்தில் இருந்தகோல் போஸ்ட்டில் தோங்கிய படி விளையாடிய போது, கோல் போஸ்ட்சரிந்து விழுந்தது. இதில், சிறுமி குஷிபாக்மர் தலையில் பலத்த காயம் அடைந்து மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு அவினாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிறுமி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், விபத்து தொடர்பாக சிறுமியின் தந்தை ஹேமந்த்குமார் பாக்மர்கொடுத்த புகாரின் பேரில், பள்ளியின் நிர்வாக இயக்குனர் சுவேதா கிருஷ்ணமூர்த்தி, முதல்வர் ரூடால்ப், ஆசிரியை அமரீஸ்வரி, விளையாட்டு ஆசிரியர்கள் சீனிவாசன், பரத் ஆகிய 5 பேர் மீது பீளமேடு போலீசார்வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தனி நபருக்கு கொடுங்காயம் ஏற்படுத்துதல் மற்றும் சிறார் பாதுகாப்பு சட்டம் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.