உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொருள் மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு உறுதிமொழி எடுத்தனர்.


கோவை: உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி, கோவை மாநகர் காவல்துறையின் சார்பில் வெள்ளலூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் புகையிலை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

கோவை மாநகர் காவல் ஆணையரின் அறிவுறுத்தலின்படி,போத்தனூர் காவல் நிலைய ஆய்வாளர் அசோக்குமார் தலைமையில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், போதைப்பொருள் மற்றும் புகையிலைப் பழக்கங்களால் ஏற்படும் உடல்நல, மனநல மற்றும் சமூக பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.



குறிப்பாக, போதைப்பொருள் பயன்பாடு இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிப்பதோடு, குடும்ப அமைதியை பாதித்து குற்றச்செயல்கள் அதிகரிக்கவும் வழிவகுக்கும் என விளக்கப்பட்டது. மேலும், புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதால் புற்றுநோய், இதய நோய், நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தான நோய்கள் ஏற்படும் அபாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

போதைப்பொருள் பழக்கத்தால் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் குடும்பா உறவுகள் பாதிக்கப்படுவதுடன், சமூகத்தில் தனிமைப்படுத்தப்படும் நிலையும் உருவாகும் என தெரிவிக்கப்பட்டது.

இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போதைப்பொருள் பயன்பாட்டிலிருந்து விலகி, கல்வி, விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு செயல்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தினர்.



நிகழ்ச்சியின் நிறைவில், "போதைப்பொருள் மற்றும் புகையிலைப் பொருட்களை பயன்படுத்தமாட்டோம்; மற்றவர்களையும் பயன்படுத்த விடமாட்டோம்; போதை இல்லாத ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க ஒத்துழைப்போம்" என்ற உறுதிமொழியை பொதுமக்கள் ஏற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டதுடன், போத்தனூர் காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உட்பட 10-க்கும் மேற்பட்ட காவல்துறையினரும் பங்கேற்று விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...