கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார். விளையாட்டு உபகரணங்கள் வழங்க வேண்டும் என வீரர்கள் கோரிக்கை விடுத்தனர். நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: தமிழ்நாடு பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பல்வேறு ஆய்வுப் பணிகளில் பங்கேற்பதற்காக இன்று காலை விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். அமைச்சர் நேரு உள்விளையாட்டு அரங்கம், விளையாட்டு மேம்பாட்டு கலந்துரையாடல் மற்றும் நெடுஞ்சாலைத் துறை விரிவாக்கப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார்.



கோவை நேரு உள்விளையாட்டு அரங்க வளாகத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்த கபடி வீரர் மற்றும் வீராங்கனைகளை நேரில் சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார். விளையாட்டு வீரர்கள் அமைச்சரிடம், தங்களுக்கு தேவையான டி-ஷர்ட்கள், காலணிகள் உள்ளிட்ட அடிப்படை விளையாட்டு உபகரணங்களை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அமைச்சர் விளையாட்டு வீரர்களின் கோரிக்கைகளை உன்னிப்பாக கேட்டு குறிப்பெடுத்துக் கொண்டார்.



இதனைத் தொடர்ந்து, கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறும் விளையாட்டு மேம்பாடு தொடர்பான கலந்துரையாடல் கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பங்கேற்றார். கலந்துரையாடலில் விளையாட்டு வசதிகளை மேம்படுத்துவது குறித்து விரிவான ஆலோசனை நடைபெற்றது.



பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற அமைச்சர், நெடுஞ்சாலைத் துறை விரிவாக்கப் பணிகள் குறித்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி ஆய்வுக் கூட்டம் மேற்கொண்டார். நெடுஞ்சாலை திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால விரிவாக்கப் பணிகள் குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது.

இன்று மாலை கோவையில் நடைபெறும் அகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்டப் போட்டியில், விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...