செஸ் ஒலிம்பியாட் போட்டி- கோவை உக்கடம் பெரிய குளம் I LOVE KOVAI-ல் சதுரங்கம் வண்ணம்..!

செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ள நிலையில், அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் உக்கடம் பெரிய குளம் I LOVE KOVAI-ல் செஸ் போர்டு போன்று கருப்பு வெள்ளை வண்ணங்கள் மாற்றப்பட்டுள்ளது பொது மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.


கோவை: 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி கோவையில், உக்கடம் பெரிய குளம் I LOVE KOVAI- கருப்பு வெள்ளை வண்ணங்கள் மாற்றப்பட்டுள்ளது பொது மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ஆம் தேதி மாமல்லபுரத்தில் துவங்குகிறது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்திலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக உக்கடம் பெரிய குளம் ஸ்மார்ட் சிட்டி பணிகளில் வடிவமைக்கப்பட்ட I LOVE KOVAI என்ற வண்ண வண்ண எழுத்துக்களில் செஸ் போர்டு வண்ணங்கள் தற்போது மாற்றப்பட்டுள்ளது.

உக்கடம் பெரிய குளம் கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீர் படுத்தப்பட்டு நடைபாதை, பூங்கா, குழந்தைகள் விளையாட்டு பூங்கா ஆகியவை ஏற்படுத்தப்பட்டன. அங்கு வைக்கப்பட்டிருந்த I LOVE KOVAI என்ற எழுத்துகள் மக்கள் கோவை மக்கள் பலரையும் கவர்ந்தது.

மாலை நேரங்களில் அதில் வண்ண வண்ண ஒளிகள் ஒளியூட்டப்படுவது குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரையும் கவர்ந்தது. தற்போது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ள நிலையில் அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் செஸ் போர்டு போன்ற கருப்பு வெள்ளை வண்ணங்கள் மாற்றப்பட்டுள்ளது பொது மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...