கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் சுமார் 28 கிலோ கஞ்சா பொட்டலங்களுடன் நின்றிருந்த திண்டுக்கல்லை சேர்ந்த இளைஞரை தனிப்படை போலீசார் கைது செய்து, கஞ்சாவை விற்பனைக்காக கொடுத்து அனுப்பிய திண்டுக்கலை சேர்ந்த இருவரையும் கைது செய்தனர்.
கோவை: கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் சுமார் 28 கிலோ கஞ்சா பொட்டலங்களுடன் நின்றிருந்த திண்டுக்கல்லை சேர்ந்த இளைஞரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
தமிழகம் முழுவதும் கஞ்சா மற்றும் குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கோவை மாநகரில் கஞ்சா விற்பனையை கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் சாதாரண உடையில் கோவை காந்திபுரம் வெளியூர் பேருந்து நிலையத்தில் போலீசார் காத்திருந்தனர். அப்போது திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து வந்த பேருந்தில் வந்த இளைஞர் ஒருவரை மடக்கி பிடித்த போலீசார் விசாரணை மேற்கொண்ட போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை சோதனை செய்த போது அவர் வைத்திருந்த பையில் சுமார் 28 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டங்களும், ரூ.3 லட்சம் ரொக்கம் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து கஞ்சா மற்றும் பணத்தை பறிமுதல் செய்த போலீசார் அவற்றை எடுத்து வந்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பிரவீன் என்பவரை கைது செய்தனர். பிரவீனிடம் தனிப்படை போலீசார் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், கஞ்சாவை விற்பனைக்காக கொடுத்து அனுப்பிய திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தர்மராஜ் மற்றும் சதீஷ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து கோவை அழைத்து வந்தனர். இதையடுத்து மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.