செஸ் ஒலிம்பியாட் 2022 - கோவையில் கல்லூரி மாணவ-மாணவியர்கள் விழிப்புணர்வு நடை ஓட்டம்..!

44-வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டியை முன்னிட்டு கோவையில் கல்லூரி மாணவ-மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நடை ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தொடங்கி வைத்தார்.



கோவை: 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ஆம் தேதி மாமல்லபுரத்தில் துவங்குகிறது.

இது தொடர்பாக, தமிழக அரசு சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்திலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவையில் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு நடை ஓட்டம் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், கோவையை சேர்ந்த பல்வேறு தனியார் கல்லூரி (ஹிந்துஸ்தான், கற்பகம், ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி) மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு செஸ் ஒலிம்பியாட் 2022 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் நடை ஓட்டம் மேற்கொண்டனர்.



கோவை நேரு விளையாட்டு அரங்கில் துவங்கிய இந்த நடை ஓட்டம் வ உ சி மைதானம் வழியாக சென்று மீண்டும் நேரு உள்விளையாட்டு அரங்கில் வந்தடைகிறது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் கொடியசைத்து துவக்கி வைத்து நேரு உள்விளையாட்டு அரங்கில் இருந்து வெளியில் வரும் வரை மாணவர்களுடன் நடை ஓட்டம் மேற்கொண்டார்.



இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு செஸ் ஒலிம்பியாட் லோகா பதாகைகளை ஏந்தியும் செஸ் ஒலிம்பியாட் குறித்தும் பதாகைகளை ஏந்தி நடை ஓட்டம் மேற்கொண்டனர்.







Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...