"கோயம்புத்தூர்‌ வீதிகள்‌ கூறும்‌ வரலாறு" நூல்‌ வெளியீட்டு விழா..!

சி.ஆர்‌.இளங்கோவன்‌ எழுதிய “கோயம்புத்தூர்‌ வீதிகள்‌ கூறும்‌ வரலாறு” நூலின்‌ வெளியீட்டு விழா கோவையில்‌ நடைபெற்றது. கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ M.பிரதாப்‌ நூலை வெளியிட்டார்‌.


கோவை: “கோயம்புத்தூர்‌ வீதிகள்‌ கூறும்‌ வரலாறு” நூலின்‌ வெளியீட்டு விழா கோவையில்‌ நடைபெற்றது.

சி.ஆர்‌.இளங்கோவன்‌ எழுதிய “கோயம்புத்தூர்‌ வீதிகள்‌ கூறும்‌ வரலாறு” நூலின்‌ வெளியீட்டு விழா கோவையில்‌ நடைபெற்றது. கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ M.பிரதாப்‌ இ.ஆ.ப ‌நூலை வெளியிட்டார்‌. கோவை நன்னெறிக்‌ கழக தலைவர்‌ இயகோகா N.சுப்பிரமணியம்‌ பெற்றுக்கொண்டார்‌.

நூல்‌ வெளியீட்டு விழா நிகழ்விற்கு கொடிசியா தலைவர்‌ V.திருஞானம்‌ தலைமை வகித்தார்‌. இந்திய தொழில்‌ வர்த்தக சபை முன்னாள்‌ தலைவர்‌ D‌.நந்தகுமார்‌, கொடிசியா, கெளரவ செயலாளர்‌, R.சசிகுமார்‌, ஆகியோர்‌ முன்னிலை வகித்தார்‌.

கோவை பற்றிய பல வரலாற்று நூல்களை எழுதி வரும்‌ எழுத்தாளர்‌ சி.ஆர்‌.இளங்கோவன்‌ ஆவார்‌. இவரின்‌ கோயம்புத்தூர்‌ ஒரு வரலாறு, சிறுவாணி, கோவையும்‌ - சினிமாவும்‌ ஆகியவை அதிக வரவேற்பை பெற்ற நூல்கள்‌ ஆகும்‌.

இந்த கோயம்புத்தூர்‌ வீதிகள்‌ கூறும்‌ வரலாறு எனும்‌ நூல்‌ மொத்தம்‌ 87 வீதிகளை பற்றி கூறுகிறது. சில வீதிகளின்‌ பெயர்கள்‌, அங்குள்ள கோவில்களால்‌ அமைந்தவை. சில வீதிகளின்‌ பெயர்கள்‌ முக்கிய பிரமுகர்களின்‌ பெயர்களால்‌ அமைந்தவை. சில வீதிகள்‌ நகராட்சி தலைவர்களின்‌ பெயர்களால்‌ அமைந்தவை. சில வீதிகள்‌ சமூகங்களின்‌ பெயர்களால்‌ அமைந்தவை. சில வீதிகள்‌ பிரிட்டிஷ்காரர்களின்‌ பெயர்களால்‌ அமைந்தவை. சில வீதிகள்‌ திரையரங்குகள்‌ பெயராலும்‌, சில வீதிகள்‌ தொழிற்சாலைகளின்‌ பெயராலும்‌ அமைந்தவை ஆகும்‌.

சில வீதிகள்‌ முன்பு ஆங்கில பெயராக இருந்து, சுதந்திரத்திற்கு பிறகு பெயர்‌ மாற்றம்‌ பெற்று இருக்கின்றன. எடுத்துக்காட்டாக பிளாக்‌ ஸ்டோன்‌ சாலையானது, அப்துல்‌ ரஹிம்‌ சாலையாகவும்‌, சலிவன்‌ வீதி, சுப்ரி வீதியாகவும்‌, தாமஸ்‌ வீதி, சுப்பையா வீதியாகவும்‌ மாறி இருக்கிறது.

இடையிடையே டவுன்ஹாலில்‌ உள்ள மணிக்கூண்டு உருவான கதை மோசஸ்‌ ஞானாபரணம்‌ கண்‌ மருத்துவமனை யாருடைய பெயரால்‌ அமைந்தது. பாரதி பூங்காவின்‌ முந்தைய பெயர்‌ என்ன? என்று பல கிளைக்‌ கதைகளும்‌ இந்த நூலில்‌ உண்டு. எல்லாவற்றிற்கும்‌ மேலாக தற்போதைய வீதிகளோடு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இராசகேசரி பெருவழி எனும்‌ பண்டைய நெடுஞ்சாலை சாலை பற்றிய குறிப்பும்‌ உண்டு.

இந்நிகழ்வில், கொடிசியா தலைவர்‌ V.திருஞானம்‌, இந்திய தொழில்‌ வர்த்தக சபை முன்னாள்‌ தலைவர்‌ D.நந்தகுமார்‌, கோவை நன்னெறிக்‌ கழக தலைவர்‌ இயகோகா N.சுப்பிரமணியம்‌, M.பிரதாப்‌ இஆப, நூல்‌ ஆசிரியர்‌, C.R.இளங்கோவன்‌, கொடிசியா, கெளரவ செயலாளர்‌, R.சசிகுமார்‌ ஆகியோர் இருந்தனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...