சி.ஆர்.இளங்கோவன் எழுதிய “கோயம்புத்தூர் வீதிகள் கூறும் வரலாறு” நூலின் வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்றது. கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M.பிரதாப் நூலை வெளியிட்டார்.
கோவை: “கோயம்புத்தூர் வீதிகள் கூறும் வரலாறு” நூலின் வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்றது.
சி.ஆர்.இளங்கோவன் எழுதிய “கோயம்புத்தூர் வீதிகள் கூறும் வரலாறு” நூலின் வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்றது. கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M.பிரதாப் இ.ஆ.ப நூலை வெளியிட்டார். கோவை நன்னெறிக் கழக தலைவர் இயகோகா N.சுப்பிரமணியம் பெற்றுக்கொண்டார்.
நூல் வெளியீட்டு விழா நிகழ்விற்கு கொடிசியா தலைவர் V.திருஞானம் தலைமை வகித்தார். இந்திய தொழில் வர்த்தக சபை முன்னாள் தலைவர் D.நந்தகுமார், கொடிசியா, கெளரவ செயலாளர், R.சசிகுமார், ஆகியோர் முன்னிலை வகித்தார்.
கோவை பற்றிய பல வரலாற்று நூல்களை எழுதி வரும் எழுத்தாளர் சி.ஆர்.இளங்கோவன் ஆவார். இவரின் கோயம்புத்தூர் ஒரு வரலாறு, சிறுவாணி, கோவையும் - சினிமாவும் ஆகியவை அதிக வரவேற்பை பெற்ற நூல்கள் ஆகும்.
இந்த கோயம்புத்தூர் வீதிகள் கூறும் வரலாறு எனும் நூல் மொத்தம் 87 வீதிகளை பற்றி கூறுகிறது. சில வீதிகளின் பெயர்கள், அங்குள்ள கோவில்களால் அமைந்தவை. சில வீதிகளின் பெயர்கள் முக்கிய பிரமுகர்களின் பெயர்களால் அமைந்தவை. சில வீதிகள் நகராட்சி தலைவர்களின் பெயர்களால் அமைந்தவை. சில வீதிகள் சமூகங்களின் பெயர்களால் அமைந்தவை. சில வீதிகள் பிரிட்டிஷ்காரர்களின் பெயர்களால் அமைந்தவை. சில வீதிகள் திரையரங்குகள் பெயராலும், சில வீதிகள் தொழிற்சாலைகளின் பெயராலும் அமைந்தவை ஆகும்.
சில வீதிகள் முன்பு ஆங்கில பெயராக இருந்து, சுதந்திரத்திற்கு பிறகு பெயர் மாற்றம் பெற்று இருக்கின்றன. எடுத்துக்காட்டாக பிளாக் ஸ்டோன் சாலையானது, அப்துல் ரஹிம் சாலையாகவும், சலிவன் வீதி, சுப்ரி வீதியாகவும், தாமஸ் வீதி, சுப்பையா வீதியாகவும் மாறி இருக்கிறது.
இடையிடையே டவுன்ஹாலில் உள்ள மணிக்கூண்டு உருவான கதை மோசஸ் ஞானாபரணம் கண் மருத்துவமனை யாருடைய பெயரால் அமைந்தது. பாரதி பூங்காவின் முந்தைய பெயர் என்ன? என்று பல கிளைக் கதைகளும் இந்த நூலில் உண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக தற்போதைய வீதிகளோடு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இராசகேசரி பெருவழி எனும் பண்டைய நெடுஞ்சாலை சாலை பற்றிய குறிப்பும் உண்டு.
இந்நிகழ்வில், கொடிசியா தலைவர் V.திருஞானம், இந்திய தொழில் வர்த்தக சபை முன்னாள் தலைவர் D.நந்தகுமார், கோவை நன்னெறிக் கழக தலைவர் இயகோகா N.சுப்பிரமணியம், M.பிரதாப் இஆப, நூல் ஆசிரியர், C.R.இளங்கோவன், கொடிசியா, கெளரவ செயலாளர், R.சசிகுமார் ஆகியோர் இருந்தனர்.