பொள்ளாச்சி அருகே உள்ள வேட்டைக்காரன் புதூரில் இறைச்சி கடைகளில் வசூல் வேட்டை நடத்திய, போலி சுகாதார ஆய்வாளரை போலீசார் கைது செய்தனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே கோழி கடையில் லஞ்சம் பெற்ற போலி சுகாதார ஆய்வாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள வேட்டைக்காரன் புதூர் அழுக்கு சாமியார் கோவில் வீதியைச் சேர்ந்தவர் தர்மராஜ்(22) அதே பகுதியில் கோழி கடை நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல் நேற்று கடையில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, கடைக்கு வந்த நபர் ஒருவர் தன்னை சுகாதார ஆய்வாளர் என்று கூறியுள்ளார்.
மேலும், கோழி கடையில் விதிமுறைகளைப் பின்பற்றாமல் உள்ளதாகவும், அதற்கு கடை சீல் வைக்க போவதாகவும் கூறியதாக தெரிகிறது. பின்னர் அவரிடம் ரூ.2500 அபராத தொகையை செலுத்துமாறு கூறியுள்ளார்.
அதற்கு தர்மராஜ் ரூ.500 மட்டும் கொடுத்து அதற்கு ரசித்து கேட்டுள்ளார். அதற்குள் அந்த நபர் கடையிலிருந்து தப்பி ஓடி உள்ளார். பின்னர், தர்மராஜ் அவரது நண்பர்கள் உதவியுடன் அந்த நபரை பிடித்து ஆனைமலை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.
போலீசார் விசாரணையில், அவர் பழனி அருகே அண்ணா நகர் பகுதியை சேர்ந்த குருநாதன்(32) என்பது தெரியவந்தது. மேலும், அவர் தர்மராஜிடம் தன்னை சுகாதாரத்துறை அதிகாரி என்று கூறி ஏமாற்றியதும் தெரிய வந்தது. இதையடுத்து தர்மராஜ் கொடுத்த புகாரின் பேரில் குருநாதன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.