நீண்ட நாட்களாக கழிவுநீர் தொட்டியில் கழிவுகள் அகற்றப்படாமல் துர்நாற்றம் வீசி வந்த நிலையில் கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் தற்போது கழிவுநீர் தொட்டியில் இருந்து கழிவுகளை அகற்றினர்.
கோவை: ஆட்சியர் அலுவலகத்தில் நீண்ட நாட்களாக அடைக்கப்பட்டிருந்த கழிவுநீர் தொட்டியில் இருந்து கழிவுகள் அகற்றப்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய கட்டிடம் பின்புறம் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்திற்கு அருகில் கழிவுநீர் தொட்டி உள்ளது. நீண்ட நாட்களாக கழிவுநீர் தொட்டியில் கழிவுகள் அகற்றப்படாமல் இருப்பதால் கழிவுகள் தேங்கி கழிவு நீர் வெளியேறி வாகனம் நிறுத்துமிடம் நடக்கும் பாதைகளில் தேங்கி துர்நாற்றம் வீசி வந்தது.
மழை காலங்களிலும் மழை பெய்யும் நாட்களில் மழை நீரோடு இந்த கழிவு நீரும் சேர்ந்து நடைபாதையில் தேங்கி நிற்கும். இதுகுறித்து பலமுறை ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களும் அரசு அலுவலர்களும் வாய் வழியாக புகார் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், இன்று கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் அக்கழிவு நீர் தொட்டியில் இருந்து கழிவுகளை அகற்றினர். நீண்ட நாட்களாக கழிவுநீர் தொட்டியில் கழிவுகள் அகற்றப்படாமல் துர்நாற்றம் வீசி வந்த நிலையில் தற்போது கழிவுநீர் தொட்டியில் இருந்து கழிவுகள் அகற்றப்பட்டது நிம்மதியை அளித்துள்ளது.

மேலும், இது போன்று அடிக்கடி கழிவுநீர் தொட்டியில் தேங்கும் கழிவுகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.