முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேர்முக உதவியாளரின் சகோதரர் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை…!

எஸ்.பி.வேலுமணி உதவியாளரின் சகோதரரும், வடவள்ளி சந்திரசேகர் வீட்டில் பணியாற்றி வந்த வசந்தகுமார் என்பவர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை குனியமுத்தூர் அடுத்த மைல்கல் பகுதியில் உள்ளவசந்தகுமார் என்பவரது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.இவர், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் உதவியாளர் சந்தோஷின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நண்பரும், நமது அம்மா நாளிதழ் பதிப்பாளருமான வடவள்ளி சந்திரசேகர் வீடு மற்றும் அலுவலகங்களில், மூன்று நாட்கள் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.

அதனை தொடர்ந்து, சந்திரசேகரின் நண்பரும், கே.சி.பி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சந்திரபிரகாஷ் வீட்டில் 3 ஆவது நாளாகவும்,அலுவலகத்தில் 5 ஆவது நாளாகாவும் வருமானவரித்துறை சோதனையானது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வடவள்ளி சந்திரசேகர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் வசந்தகுமார் வீட்டில் நேற்று இரவு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இரவு வருமான வரித்துறை அதிகாரிகள் அங்கு வந்த போது, அதிமுக நிர்வாகிகள் அங்கு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வடவள்ளி சந்திரசேகர், சந்திரபிரகாஷ் வீடு அலுவலகங்களில் மேற்கொண்ட ஆய்வில் பல்வேறு ஆவணங்கள் கைபற்றிப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது எஸ்.பி.வேலுமணி உதவியாளரின் சகோதரரும், வடவள்ளி சந்திரசேகர் வீட்டில் பணியாற்றி வந்த வசந்தகுமார் வீட்டில் சோதனை நடைபெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...