நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் உறுதிமொழி ஏற்பு விழா - மேயர் கல்பனா ஆனந்தகுமார் பங்கேற்பு!

கோவையில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 99 வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பிறகு மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் விக்டோரியா ஹால் வளாகத்தில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் உறுதிமொழி ஏற்கப்பட்டது.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்திலுள்ள விக்டோரியா ஹால்‌ வளாகத்தில்‌ நகரங்களின்‌ தூய்மைக்கான மக்கள்‌ இயக்கம்‌ உறுதிமொழி மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ தலைமையில்‌ ஏற்கப்பட்டது.



உக்கடம்‌ பேருந்து நிலையத்தில்‌ மாநகராட்சி சார்பில்‌ மீண்டும்‌ மஞ்சள்‌ பை வழங்கும்‌ பணியினை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்‌.சமீரன்‌ இ.ஆ.ப., தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு மஞ்சள்‌ பை, மரக்கன்றுகள்‌ மற்றும்‌ விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள்‌ வழங்கினார்‌.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில்‌ முன்னாள்‌ முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞா்‌ மு.கருணாநிதியின் 99வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்திய.



பின்னர்‌, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்‌.



அதனைத் தொடர்ந்து, விக்டோரியா ஹால்‌ வளாகத்தில்‌ நகரங்களின்‌ தூய்மைக்கான மக்கள்‌ இயக்கம்‌ உறுதிமொழி ஏற்கப்பட்டது.



அதனைத்‌ தொடர்ந்து, உக்கடம்‌ பேருந்து நிலையத்தில்‌ மாநகராட்சி சார்பில்‌ மீண்டும்‌ மஞ்சள்‌ பை வழங்கும்‌ பணியினை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்‌.சமீரன்‌ இ.ஆ.ப., தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு மஞ்சள்‌ பை, மரக்கன்றுகள்‌ மற்றும்‌ விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள்‌ ஆகியவற்றை வழங்கினார்‌.



தொடர்ந்து, மீண்டும்‌ மஞ்சள்‌ பை பயன்படுத்துவதை வலியுறுத்தி 100 எண்ணிக்கையில்‌ பிளாஸ்டிக்‌ ஒழிப்பு வாகன விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்‌.

அதனைத்‌ தொடர்ந்து, தெற்கு மண்டல அலுவலகத்தில்‌ முன்னாள்‌ முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர்‌ மு.கருணாநிதியின் 99வது பிறந்தநாளையொட்டி மேயர்‌, மாநகராட்சி தூய்மைப்‌ பணியாளர்களுக்கு இனிப்புகள்‌ வழங்கினார்‌.



பின்னர்‌, தெற்கு மண்டலம்‌, போத்தனூர்‌ பாலம்‌ முதல்‌ வெள்ளலூர்‌ குப்பைக்‌ கிடங்கு வரை சுமார்‌ 2 கிலோ மீட்டர் தூரம்‌ நடைபெற்ற நகரங்களின்‌ தூய்மைக்கான மக்கள்‌ இயக்கம்‌ விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ இ.ஆ.ப., துணை மேயர்‌ ரா.வெற்றிசெல்வன்‌‌, துணை ஆணையாளர்‌ மரு.மோ.ஷர்மிளா, மண்டல குழுத் தலைவர்கள்‌ வே.கதிர்வேல்‌ (வடக்கு), மீனா லோகு (மத்தியம்‌), சாந்தி முருகன்‌ (பணிகள்‌), வி.பி.முபசீரா (வரி விதிப்பு மற்றும் நிதி), சோமு (௭) சந்தோஷ்‌ (நகரமைப்பு), பெ.மாரிசெல்வன்‌ (பொது சுகாதாரம்‌), நிலைக்குழு உறுப்பினர்கள்‌, மாமன்ற உறுப்பினர்கள்‌, மண்டல உதவி ஆணையர்கள்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ என்று பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...