கோவையில் வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி!

கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் தெலுங்குபாளையம், அனுப்பர்பாளையம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.



கோவை: கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் தெலுங்குபாளையம், அனுப்பர்பாளையம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.



ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் ஜமாபந்தி நிகழ்ச்சி கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது.

இந்த நிலையில் கடந்த 23ம் தேதி முதல் ஜூன் 3ம் தேதி வரை கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.



இதன் ஒரு பகுதியாக இன்று கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் அனுப்பர்பாளையம், தெலுங்குபாளையம் கிராமத்திற்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஜமாபந்தியில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கினர்.



இதில் தெலுங்குபாளையம் பகுதிக்கு உட்பட்ட, பிஎன் புதூர், சீரநாயக்கன்பாளையம், பூசாரிபாளையத்தில், வேலாண்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான பென்ஷன் தொகை, முதிர்கன்னிகள் உதவித்தொகை மற்றும் இலவச வீட்டு மனை பட்டா வழங்க மனு அளித்தனர்.



இந்த நிகழ்ச்சியில், கோவை மாநகராட்சி 41 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சாந்தி தலைமையில் பாப்பநாயக்கன்புதூர் பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்களது பிரச்சனைகள் குறித்து மனு அளித்தனர்.



மனுக்களை பெற்றுக் கொண்ட சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் முருகேசன், உரிய அதிகாரிகளிடத்தில் இந்த மனுக்களை வழங்கி, இந்த பகுதி மக்களின் குறைகளை நிவர்த்தி செய்து தருவதாக உறுதியளித்தார்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...