மாநகராட்சியிலுள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை எந்த நேரத்திலும் தன்னிடம் தெரிவிக்கலாம் என மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தெரிவித்தார்.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளராகத் மு.பிரதாப் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
பின்னர், செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது,
“கோயம்புத்தூர் மாநகராட்சியின் ஆணையாளராக பணியாற்ற வாய்ப்பளித்த தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சா், மின்சாரத்துறை அமைச்சர் மற்றும் மேயா் ஆகியோரது வழிகாட்டுதலின்படி மாநகராட்சி பகுதிகளிலுள்ள 100 வார்டுகளிலும் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை கண்டறிந்து, அந்த பணிகளை மேம்படுத்திடவும், துரிதப்படுத்திடவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மேயர் தலைமையில் பிரதிவாரம் தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படும். மாநகராட்சியிலுள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை எந்த நேரத்திலும் என்னிடம் தெரிவிக்கலாம்.” என மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தெரிவித்தார்.