கோவை மாநகராட்சி ஆணையாளராக பிரதாப் இன்று பொறுப்பேற்று கொண்டார்..!

மாநகராட்சியிலுள்ள பொதுமக்கள்‌ தங்கள்‌ குறைகளை எந்த நேரத்திலும்‌ தன்னிடம்‌ தெரிவிக்கலாம் என மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ தெரிவித்தார்.



கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஆணையாளராகத் மு.பிரதாப்‌ இன்று பொறுப்பேற்றுக்‌ கொண்டார்.



பின்னர்‌, செய்தியாளர்‌ சந்திப்பில்‌ தெரிவித்ததாவது,



“கோயம்புத்தூர்‌ மாநகராட்சியின்‌ ஆணையாளராக பணியாற்ற வாய்ப்பளித்த தமிழக முதலமைச்சர்‌ அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சா்‌‌, மின்சாரத்துறை அமைச்சர்‌ மற்றும்‌ மேயா்‌ ஆகியோரது வழிகாட்டுதலின்படி மாநகராட்சி பகுதிகளிலுள்ள 100 வார்டுகளிலும்‌ மக்களுக்குத்‌ தேவையான அடிப்படை வசதிகளை கண்டறிந்து, அந்த பணிகளை மேம்படுத்திடவும்‌, துரிதப்படுத்திடவும்‌ உரிய நடவடிக்கை எடுக்கப்படும்‌.

மேயர்‌‌ தலைமையில்‌ பிரதிவாரம்‌ தோறும்‌ பொதுமக்கள்‌ குறைதீர்க்கும்‌ கூட்டம்‌ நடத்தப்படும்‌. மாநகராட்சியிலுள்ள பொதுமக்கள்‌ தங்கள்‌ குறைகளை எந்த நேரத்திலும்‌ என்னிடம்‌ தெரிவிக்கலாம்‌.” என மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ தெரிவித்தார்.

Newsletter

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...