கோவையில் உள்ள அரசு அலுவலகங்களில் பொது மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் இடைத்தரகர்கள் மீது கடும் நடவடிக்கை..!

வட்டாட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் வேலையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவையில் உள்ள அரசு அலுவலகங்களில் பொது மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் இடைத்தரகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.



கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில், வீராபாண்டியை சேர்ந்த கேசவமணி (47). என்பவர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களிடம், தான் ஒரு அரசு அலுவலர் என்றும், விரைவில் சான்றிதழ்கள் பெற்று தருவதாக கூறி பணம் பறிப்பில் ஈடுபட்டு வந்ததாக தொடர் புகார் எழுந்தது.

இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள், இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தனர். புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து கேசவமணியை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது, இவர் பொதுமக்களிடம் சாதி, வருமானம் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை உடனடியாக வாங்கி தருவதாக கூறி பணம் பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இது குறித்து வருவாய் துறை அதிகாரிகள் கூறும் போது: அரசு அலுவலகங்களில் அரசு ஊழியர்கள் என கூறி பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், மேலும் பொதுமக்கள் கோரும், சாதி, வருமானம், இருப்பிடம், விதவை, சிறு/குறு விவசாயி, வாரிசு, சொத்து மதிப்பு உள்ளிட்ட சான்றிதழ்கள் இ-சேவை மையங்கள் மூலம் 15 நாட்களுக்குள் வழங்கப்படுவதால் இடைத்தரகர்கள் நம்பி யாரும் பணத்தை இழக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

அதே போல் இந்த சான்றிதழ்கள் பெறுவதில் தாமதம் அல்லது குறைபாடுகள் இருந்தால் வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியர் நேரில் அணுக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...