கோவையில் மது போதையில் கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி பலி…!

சம்பவம் தொடர்பாக பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவையில் மது போதையில் கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி நீரில் மூழ்கி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை பேரூர் மாதம்பட்டி மல்லிகைதோட்டம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ண பாண்டியன் (33). இவரது மனைவி மினிப்ரியா (30). தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.

இவர்களுக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். கிருஸ்ண பாண்டி மாதம்பட்டி பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் விவசாயக் கூலியாக வேலை செய்து வந்தார்.

இதனால் அதே தோட்டத்தில் கடந்த ஆறு வருடங்களாக குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வந்தார். கிருஷ்ண பாண்டி அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று வழக்கம் போல் குடித்து விட்டு வீட்டுக்கு வந்த கிருஷ்ண பாண்டியை, மனைவி மினி பிரியா திட்டி அறிவுரை கூறியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த கிருஸ்ண பாண்டி தோட்டத்தின் அருகே இருந்த கிணற்றின் சுவரில் அமர்ந்து இருந்ததாக தெரிகிறது.

அப்போது திடீரென தவறி கிணற்றுக்குள் விழுந்த அவரை சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் மீட்டு முயன்றனர். மேலும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.



அங்கு வந்த தொண்டாமுத்தூர் தீயணைப்புத்துறையினர் கிணற்றில் இறங்கி கிருஷ்ணபாண்டி உடலை சடலமாக மீட்டனர்.



சம்பவம் தொடர்பாக பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...