கோவை செட்டிபாளையம் பேரூராட்சி துப்புரவு பணியாளர் தூக்கிட்டு தற்கொலை; போலீசார் விசாரணை.

குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால், கணவன் -மனைவி இடையே அடிக்கடி தகராறு என தொடர் பிரச்சனை இருந்து வந்ததால், கிருஷ்ணன் கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.


கோவை: கோவை செட்டிபாளையம் அன்னை இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (30), செட்டிபாளையம் பேரூராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு, ஒரு வருடத்திற்கு முன்பு தான் சுஜிதா (21) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது.

குடிப்பழக்கத்துக்கு அடிமையான கிருஷ்ணன், தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால், அடிக்கடி கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும், திருமணம் ஆகி ஒரு வருடம் ஆன நிலையில்,குழந்தை இல்லை மற்றும் குடும்பத்தில் தொடர் பிரச்சனை இருந்து வந்ததால், கிருஷ்ணன் கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த சூழலில், நேற்று இரவு கிருஷ்ணன் வழக்கமாக வீட்டுக்கு தூங்கச் சென்றார். பின்னர், இரவு 10 மணி அளவில் மனைவி சுஜிதா, அவரது அறையின் கதவை தட்டிய போது திறக்கவில்லை.

இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் உதவியோடு அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, கிருஷ்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள் செட்டிபாளையம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...