திருப்பூர் பல்லடம் அருகே உடுமலை சாலையில் இரண்டு கார் நேருக்கு நேர் மோதி விபத்து: 2-பெண்கள் பலி ..!

பல்லடம் அருகே உடுமலை சாலையில் இரண்டு கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில், இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே பலி, நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.


திருப்பூர்:திருப்பூர் பல்லடம் அருகே உடுமலை சாலையில் இரண்டு கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து மாருதி 800 காரில் ராஜேந்திரன் என்பவர் தனது உறவினர்கள் ஜெயந்தி, சுலோச்சனா, சுசீலா, கமலா ஆகியோருடன் பல்லடத்திற்கு வந்து கொண்டிருந்தார்.

திருப்பூரிலிருந்து ரமேஷ் என்பவர் தனது 12 வயது மகன் கோகுலுடன் உடுமலைப்பேட்டைக்கு சென்று கொண்டிருந்தார். பல்லடம் அருகே உடுமலை சாலை புள்ளியப்பம்பாளையம் அருகே இரண்டு காரும் நேர் நேர் மோதி விபத்துக்குள்ளானது.



இரண்டு கார்களும் அப்பளம் போல நொறுங்கின. இந்த விபத்தில் சுசீலா, கமலா இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் காரின் இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கும், தனியார் மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.



ஜெயந்தி, சுலோச்சனா இருவரும் பல்லடம் அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகின்றனர். 12 வயது சிறுவன் கோகுல், ரமேஷ், ராஜேந்திரன் மூவருக்கும் முதலுதவி சிகிச்சை அளித்த பின் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...