கோவையில் காதலிப்பதாக கூறி இளம்பெண்ணிற்கு பாலியல் வன்புணர்வு - தனியார் நிறுவன ஒப்பந்த ஓட்டுநர் கைது..!

கோவை செட்டிபாளையம் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 23 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்புணர்வு செய்த ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவையில் காதலிப்பதாக கூறி இளம்பெண்ணுக்கு பாலியல் வன்புணர்வு செய்த ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

கோவை செட்டிபாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் எம்.என்.சி நிறுவனத்தில் பணியாற்றி வரும் கோவையை சேர்ந்த 22 வயது பெண் ஒருவர் செட்டிபாளையம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

அதில் தான் கடந்த 11 மாதங்களாக ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருவதாகவும், அதே நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டு வரும் டிராவல்ஸில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த அப்துல்ஹமீது என்பவர் தனக்கு திருமணம் ஆனதை மறைத்துகாதலிப்பதாகக் கூறி பழகி வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும், அடிக்கடி செல்போனில் இருவரும் பேசி வந்த நிலையில் தன்னை அப்துல்ஹமீது பல முறை வெளியே அழைத்துச் சென்று வந்ததாகவும், அப்போது கட்டாயப்படுத்தி பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டு வந்ததாகவும்தெரிவித்துள்ளார்.

மேலும், தன்னிடமிருந்து பல முறை பணத்தையும் வாங்கியுள்ளதாக கூறிய அந்த பெண் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்துல் ஹமீது பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர் காதலிப்பதாக கூறி பழகி ஏமாற்றியது தெரியவந்தது. மேலும், பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்களை செல்போனில் வைத்திருப்பதும் தெரியவந்ததுள்ளது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...