கோவையில் ஆந்தை இனங்களை பாதுகாக்க 200 செயற்கை கூண்டுகள் அமைக்க திட்டம்.

உலக பல்லுயிர் தின விழாவை முன்னிட்டு, கோவை சிங்காநல்லூர் குளத்தில், மாவட்ட வனத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜி எஸ் சமீரன் கலந்து கொண்டு தலைமை தாங்கினார்.


கோவை: உலக பல்லுயிர் தின விழாவை முன்னிட்டு,

கோவை சிங்காநல்லூர் குளத்தில்,

மாவட்ட வனத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜி எஸ் சமீரன் கலந்து கொண்டு தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, சிங்காநல்லூர் குளக்கரையில் இருக்கும் மருத்துவ குணம் கொண்ட தாவரங்கள் பற்றி வன மரபியல் மற்றும் மரபெருக்கு நிறுவன இயக்குனர் டாக்டர் குஞ்சு கண்ணன் விளக்கமளித்தார். மேலும், அதிகரித்து வரும் நகரமயமாதல் காரணமாக உணவுச் சங்கிலியில் முக்கிய பங்கு வகிக்கும் ஆந்தை இனங்கள் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்ய இடம் இல்லாத சூழ்நிலை உள்ளது என்பதை விளக்கினார்.



இதை கருத்தில் கொண்டு, ஆந்தை இனங்களுக்கான செயற்கை கூடு அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ் சமீரன் துவக்கி வைத்தார்.

பின்னர், இது குறித்து மாவட்ட ஆட்சியர் பேசுகையில், "கோவை மாநகரின் இயற்கை சமநிலையை சீராக வைப்பதில் சிங்காநல்லூர் குளம் முக்கிய பங்கு வகிக்கிறது. நகரின் மத்தியில் அமைந்திருக்கும் போதும், இந்த குளம் பல லட்சக்கணக்கான பல்லுயிர்கள் வாழும் இடமாக திகழ்கிறது. உணவுச் சங்கிலியை சீராக வைக்கிறது. இந்த இடத்தில் பல்லுயிர் தினம் கொண்டாடப்படுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது", என்றார்.



எலி போன்ற விலங்குகளை கட்டுப்படுத்தி, உணவுச் சங்கிலியை சமநிலையில் வைத்து மனிதர்களுக்கு உதவக்கூடிய ஆந்தைகளுக்கு செயற்கை கூடு அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிகழ்ச்சியில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஆந்தைகளை பாதுகாக்கும் நோக்கில் மாநகர் முழுவதும் அடுத்த நான்கு மாதத்திற்குள் 200 செயற்கை கூண்டுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக விழா அமைப்பாளர்கள், தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்வின் போது, வன மரபியல் மற்றும் மரபெருக்கு நிறுவன இயக்குனர் டாக்டர் குஞ்சு கண்ணன், மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், சலீம் அலி பறவைகள் மைய விஞ்ஞானி பாபு, நகர்புற பல்லுயிர் பாதுகாப்பு கல்வி மைய உறுப்பினர் சொக்கலிங்கம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...