ஓராண்டில் எந்த சாதனையும் நடைபெறவில்லை - பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு!

கோவையில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், திமுக அரசு குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து பேசியுள்ளார்.


கோவை: பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கோவை வந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், கோவை வேலாண்டிபாளையம் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்தார்.



அப்போது பேசிய அவர், கோவை சாய்பாபா காலனி தேமுதிக அவைத் தலைவர் ரமேஸின் மனைவி விபத்தில் உயிரிழந்துள்ளதாகவும், இந்த விபத்துக்கு கனரக வாகனம் முக்கிய காரணம் எனவும் தெரிவித்தார்.

குறிப்பிட்ட நேரத்தை தவிர மற்ற நேரங்களில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி கனரக வாகனங்கள் மாநகர பகுதியில் இயங்குவதால் இம்மாதிரியான விபத்துகள் ஏற்படுவதாக குற்றம்சாட்டினார். மேலும், கோவை மாநகராட்சி இதனை கவனத்தில் எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். தடாகம் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும், திமுக ஆட்சி குறித்து பதிலளித்த அவர் முதல்வர்கள், அமைச்சர்கள் மாறுகின்றனர். ஆட்சிகள் தான் மாற்றம் காட்சிகள் மாறவில்லை. திமுக மாடல், ஓராண்டு சாதனை என திமுகவை சார்ந்தவர்களே சொல்கிறார்கள். இந்த ஓராண்டில் எந்த சாதனையும் நடைபெறவில்லை. ஒன்றியம், மாடல் என்ற வார்தைகளால் மக்களுக்கு எந்த ஆதாயமும் இல்லை.



சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் மோசமாகவும், கேள்விக்குறியாகவே உள்ளது. விசாரணை என்று அழைத்து சென்று கொலை செய்யக்கூடிய அளவில் தான் தற்போது நாட்டில் சட்டம் ஒழுங்கு இருக்கிறது. இதை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்.

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. தெருவிற்கு 10 டாஸ்மாக் திறக்கிறார்கள். வேலை வாய்ப்பை கொடுக்கும் வகையில் மாவட்டத்திற்கு ஒரு தொழிற்சாலை கூட திறக்கப்படுவதில்லை என தெரிவித்தார்.

நடந்த உள்ளாட்சி தேர்தலில் செந்தில் பாலாஜி கொலுசு பணத்தை தவிர வேறென்ன செய்தார் என மக்களே கேளுங்கள் என கேட்டுக்கொண்ட அவர் தேர்தல் நேரத்தில் ஓட்டுக்காக மட்டும் வருவதாகவும், அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை என தெரிவித்தார்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...