கோவையில் 474 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்: கடை உரிமையாளர்களுக்கு ரூ.34,000 அபராதம்!

கோவை மாநகராட்சியில் 37 கடைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 474 பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடை உரிமையாளர்களுக்கு ரூ.34,000 வரையில் அபராதம் விதிக்கப்பட்டது.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி துணை ஆணையர்‌ மோ.ஷர்மிளா, மாநகராட்சி நகர்நல அலுவலர்‌ சதீஷ்குமார்‌ ஆகியோர்‌ உத்தரவின்பேரில்‌, வடக்கு மண்டலம்‌ பகுதிகளில்‌ செயல்பட்டு வரும்‌ 37 கடைகளில்‌ மாநகராட்சி மண்டல சுகாதார அலுவலர்‌ இராதாகிருஷ்ணன்‌ தலைமையில்‌ சுகாதார ஆய்வாளர்கள்‌ ஆய்வு மேற்கொண்டனர்.



இதில், தமிழக அரசால்‌ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்‌ பொருட்கள் பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து, கடையிலிருந்த‌ 470 கிலோ பிளாஸ்டிக்‌ பொருட்கள்‌ பறிமுதல்‌ செய்யப்பட்டு, கடைகளின்‌ உரிமையாளர்களுக்கு மொத்தம்‌ ரூ.32,000/- அபராதம்‌ விதிக்கப்பட்டது.



இதே போன்று, கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மேற்கு மண்டலம்‌, 73வது வார்டுக்கு உட்பட்ட மருதமலை சாலையில்‌ உள்ள பழமுதிர் நிலையத்தில்‌ மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்‌ சலேத்‌ ஆய்வு செய்யப்பட்டதில்‌, தமிழக அரசால்‌ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்‌ பொருட்கள் பயன்படுத்தியதால்‌ 4 கிலோ பிளாஸ்டிக்‌ பொருட்கள்‌ பறிமுதல்‌ செய்யப்பட்டு, கடைகளின்‌ உரிமையாளர்களுக்கு மொத்தம்‌ ரூ.2,000/- அபராதம்‌ விதிக்கப்பட்டது.

Newsletter

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...