ஆட்டோக்களுக்கு ஆன்லைன் ஆப், புதிய கட்டணம் நிர்ணயம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றம்!

கோவை தொழிற்சங்கங்களுடன் பேசி நியாயமான மீட்டர் கட்டணத்தை நிர்ணயித்திட வேண்டும் என்று ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட மாநாட்டின் போது வலியுறுத்தப்பட்டது.


கோவை: கோவை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் சிஐடியு வின் 14 வது மாவட்ட மாநாடு காந்திபுரம் பகுதியில் உள்ள கேரள சமாஜம் பி.கே.சுகுமார் நினைவரங்கத்தில் நடைபெற்றது.

இம்மாநாட்டிற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் இரா.செல்வம் தலைமை தாங்கினார். இந்த மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாய் கடந்துள்ள நிலையில் வாகன உதிரி பாகங்கள் விலை உயர்வு ஆர்.டி.ஓ. கட்டணங்கள் மற்றும் இன்சூரன்ஸ் கட்டணங்கள் அனைத்தும் கண்மூடித்தனமாக உயர்ந்துள்ள சூழ்நிலையில் இன்றைய விலைவாசி உயர்வையும் கணக்கில் கொண்டு மினிமம் 1.5 கி.மீட்டருக்கு ரூ.50/-ம், அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கு ரூ.25/-ம் தொழிற்சங்கங்களுடன் கலந்து பேசி உடனடியாக அறிவித்திட வேண்டும்.

கோவை மாவட்டத்தில் ரேபிடோ பைக் டாக்ஸி என்னும் பெயரில் தனியார் இருசக்கர வாகனத்தை வாடகை உபயோகத்திற்கு பயன்படுத்தி ஒரு கார்ப்பரேட் நிறுவனம் சட்ட விரோத செயலில் ஈடுபட்டு வருகிறது. டூவீலர் வாடகை எடுப்பது மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிரானது. எனவே மாநில அரசு உடனடியாக பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும்.

ஓலா, ஊபர் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் சேவை தொழிலாக ஆட்டோ தொழிலில் நுழைந்து பல லட்சம் ரூபாய்களை ஆட்டோ ஓட்டுநர்களை சுரண்டியும், பொதுமக்களை ஏமாற்றியும், கொள்ளையடித்து வருகிறார்கள் என்றும் தமிழக அரசு இத்தகைய நடவடிக்கையை அனுமதிக்காமல் ஆட்டோக்களுக்கு ஆன்லைன் ஆப் (App) துவங்கி பொதுமக்களுக்கு சேவையும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நன்மையும் வழங்க வேண்டும்.

10 கிலோ மீட்டர் சுற்றளவில் கோவை மாநகரில் 15 ஆயிரம் ஆட்டோக்கள் இயங்கி வருகிறது. இத்தொழிலாளர்களை நம்பி 15 ஆயிரம் குடும்பங்கள் உள்ளது.

இன்றைய சமூக சூழல் விலைவாசியில் வாழ்க்கை நடத்துவது என்பது பெரும் சிரமமாகும். தன் வருமானத்தில் பெரும்பகுதி வீட்டு வாடகைக்கு செலவிட வேண்டிய நிலையில் ஆட்டோ தொழிலாளர்கள் இருக்கிறார்கள். எனவே தமிழக அரசு நல வாரியத்தில் பதிவு செய்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நகரப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு குடியிருப்புகளை வழங்க வேண்டும்.

பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட சாலை பாதுகாப்பு மசோதா தமிழக அரசு தமிழகத்தில் அமல்படுத்த வேண்டாம், கோவை மாநகரில் கட்டி முடிக்கப்பட்ட மேம்பாலங்களை உடனடியாக திறந்திட வேண்டும், உக்கடம் மேம்பால பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

புதிய நிர்வாகிகள் தேர்வு:

மாநாட்டில் கோவை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் புதிய தலைவராக இரா.செல்வம், பொதுச் செயலாளராக எம்.கே.முத்துக்குமார், பொருளாளராக எம்.மைக்கேல் சாமி உள்ளிட்ட 37 பேர் கொண்ட நிர்வாகக்குழு மாநாட்டில் தேர்வு செய்யப்பட்டது.



மாநாட்டில் மாவட்டம் முழுவதும் இருந்து 300க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...