பொள்ளாச்சியில் ஜமாபந்தியில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 101 மனுக்களில் 27 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வருவாய் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவை: பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில், நேற்று 2வது நாளாக வடக்கு உள் வட்டத்திற்கான ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரேசுபம் ஞானதேவ் ராவ் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இந்த ஜமாபந்தியில், வடக்கு உள் வட்டத்திற்கு உட்பட்ட சந்தேகவுண்டன்பாளையம், குள்ளிசெட்டிபாளையம், காபிலிபாளையம், பொள்ளாச்சி நகர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த பொதுமக்களிடமிருந்து, பட்டா மாறுதல், முதியோர் உதவித் தொகை, நத்தம் பட்டா, இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 101 மனுக்கள் பெறப்பட்டது. இதில் 27 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் மீது பரிசீலனை செய்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய் துறையினர் தெரிவித்தனர்.