நேற்று இரவு வினோத் கண்ணன்(36) தனது வீட்டில் உள்ள படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, நள்ளிரவு திடீரென படுக்கை அறையில் இருந்த மேற்கூரையின் கான்கிரீட உடைந்து அவர் மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை: கோவை ராமநாதபுரம் பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத் கண்ணன் (35). பிளாஸ்டிக் கதவு செய்யும் பணியை செய்து வந்தார். இவரது மனைவி சாரு (26). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. வினோத் அவரின்தந்தை கிருஷ்ணன் ஆகியோருடன் கடந்த 8 வருடங்களாக வாடகை வீட்டில் தங்கி வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று இரவு வினோத் கண்ணன் தனது வீட்டில் உள்ள படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, நள்ளிரவு 2 மணியளவில், திடீரென படுக்கை அறையில் இருந்த மேற்கூரையின் கான்கிரீட உடைந்து அவர் மீது விழுந்தது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில், பதட்டமடைந்த குடும்ப உறுப்பினர்கள் உடனடியாக வீட்டை விட்டு வெளியே வந்து அக்கம் பக்கத்தினருக்கு தகவல் அளித்தனர்.விபத்து குறித்து ராமநாதபுரம் போலீசுக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவம் இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் உள்ளே சென்று இறந்தநிலையில் இருந்த வினோத் கண்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வழக்கமாக வீட்டின் வரவேற்பு அறையில் தூங்கும் வினோத், நேற்று படுக்கை அறையில் தூங்கிய போது மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தார் மற்றும் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.